இழந்தது இயன்றது!
- Sridhana
- Aug 27, 2020
- 1 min read
Updated: Aug 30, 2020
கொரோனா நாட்களில் ITல் இழந்தது... மனதளவில் இயன்றது!
படித்தகல்விக்கேற்ற வேலை,
வேலைக்கேற்ற ஊதியம்,
ஊதியத்திற்கேற்ற - சேவையும் செலவும் !
மண்டையோட்டுக்குள் ஆயிரம்
பிரச்சனைகள் கொட்டிக்கொண்டே இருந்தாலும்,
சகஊழியரின் கேலிக்கும்மாளத்தில்
பிரச்சனைகள் எல்லாம் கோமாவிற்குச் செல்லும்!
மனையில் இருந்து கிளம்பியதும்,
மனைத்தொல்லை இனியில்லை
என்றுக் குதிப்பதும்...
சிலநண்பர்கள் - வண்ணப்பட்டாம்பூச்சியின் வடிவங்களை
ரசிக்கும் அசட்டுஅழகும் மங்கியது
சிலநாட்களாக!
நாம் மட்டும் பணியிடத்தை இழக்கவில்லை,
தவறேதும் செய்தால்,
வாழைப்பழத்தில் கோனூசி ஏத்தும் வார்த்தைகளும்
வஞ்சப்புகழ்ச்சி வார்த்தைகளும்
நம்மை இழக்கிறது !
மனையில் இருக்கையில்
உறங்கிக்கொண்டே இருக்கும்
உணவுப்பை,
பணிமனையில் மட்டும்
சிறுகுடல் பெருங்குடலோடு சண்டையிட்டு
மூளையைச் சுரண்டிக்கொண்டே
இருக்கும் அதிசயம்
இன்னும் புரியவில்லை எனக்கு !
வடிவாய் செதுக்கும் சிற்பிகளின்
சிற்பத்தில் இருக்கும் பிழையை,
பிழையேதும் மிச்சம்வைக்காமல்
பிழையில்லா சிற்பத்தை வடிவமைப்பதற்குள் வரும்
கலவரம் தான் எத்தனை - அப்பப்பா !
பேச்சும் சிரிப்பும் அலைமோதினாலும்,
கப்பல்
திறம்பட செலுத்தி,
சேரவேண்டிய நேரத்திற்குள்
பழுதில்லாமல் சேர்ந்துவிடும் !
வகுத்திருந்த நேரங்கள் எல்லாம் - நம்மைச்சுற்றி
கோலமாவினால் போட்ட
வட்டம் ஆகியது - நினைத்தபோது அழித்துக்கொள்ள !
தூங்கும் நேரத்தில் கூட
பரதம் ஆடுகிறது மூலை - தகவல் வரும் ஓசைக்கு !
சிலநேரம் மட்டும்
மேசையில் கிடந்த ஒன்று இன்று
நினைத்தபோதெல்லாம் ஏறிக்கொள்கிறது
மடியில் - மடிக்கணினி !
மறந்த விசயங்கள்
எல்லாம்,
ரசித்து பார்க்க வைத்தது...
நாகரிக நாட்கள் பிரித்த
நண்பர்கள் சொந்தங்கள்
எல்லாம்,
நினைவில் வரவழைத்தது
இந்த தீநுண்மி நாட்கள்!
இதுவும் கடந்து போகிறதோ?
இல்லை - வழக்கம்போல்
இதுவும் பழக்கப்போகிறதோ!
மீண்டும் விரைவில் சந்திக்கையில்,
பருமன் மாறினாலும்,
என் அடையாளமாக
என்றும் என்னோடே வாழும்
என் புன்னகை (இளிச்சவாய்),
உங்கள் முகத்திலும்
பூக்க என் வாழ்த்துக்கள் !
😄
Smiling Beauty.. இளிச்சவாய் 😁😁