இயற்கை ஒன்றுதான் அனைவருக்கும் !
- Sridhana
- Jan 4, 2021
- 1 min read
கோடியிரண்டு கொட்டி,
உலங்கூர்தி வாங்கி,
இமயம் மேலேறி,
உச்சியில் நடுங்கி,
பெருமிதத்தோடு நின்று அவன் சொன்னதும்,
தெருக்கோடியில்
ஒதுங்க இடமில்லாமல்,
அரைவயிற்றிற்கும் வழியில்லாமல்,
தார்ரோட்டில் படுத்து சொன்னதும்,
"எவ்வளவு அழகு இந்த வான்மேகம்" !
இயற்கை ஒன்றுதான் அனைவருக்கும்
மனிதன் தான் அதனை மறக்கிறோம்
மிருகமாய் வாழ்கிறோம் !
👌👌