உருகி ஊற்றுதடி…
- Sridhana

- Oct 19, 2022
- 1 min read
Updated: Oct 20, 2022
மறக்க நினைக்கும் கவலைகளை
மண்ணுக்குள் புதைக்கிறாய்...
சிரிக்க மறந்த நாட்களை
மீண்டும் அழகாய்த் தருகிறாய்...
அகவை ஏறினாலும் - இதயத்தை
உள்ளங்கைகளால் அள்ளி
துள்ளிக்குதிக்க வைக்கிறாய்...
சிந்தித்து ஒடுங்கிக்கிடக்க ஆயிரமுண்டு
மண்டை ஓட்டுக்குள் - இருந்தும்,
உன்னை நினைத்தாலே
இதழோரமும் இதயத்தோரமும்
சில்லென்று ஒரு சின்னச்சிரிப்பு
என்னைத் தாண்டி எட்டிப்பார்க்கிறது ...
கிறுக்கானேன் நான்,
உன்னோடு பேச நினைத்து
உன்னை ரசிக்க நினைத்து
உன்னைத் தாங்கத்தடுக்க
பார்த்துக்கொள்ள நினைத்து
உன் குரலில் - ம்ம்ம்...
பாடலோ ஏசலோ - கேட்க நினைத்து...
உன் பாசத்தை
கொஞ்சகொஞ்சமாய் அனுபவிக்க நினைத்து..
நினைத்து நினைத்து
உருகி உருகி
உள்ளிருந்து ஊற்றுதடி
என் மொத்த பாசமும்
உனக்காக மட்டும் கொட்டித்தீர்க்க...
என்றும் என் நினைவில் நீ
உன் நிழலாய் நான்...
-ஶ்ரீதனா



Comments