இன்றும் முதல் நாள் போல்...
- Sridhana
- Sep 3, 2020
- 1 min read
முதல் நாள் போல்
என்னைத் தாங்கி தாங்கி இன்றும்
கெஞ்சுகிறான் ...
எனக்கே எனக்கென்றானாள் இவள்
என்று குதூகலத்தில் இன்றும்
குதிக்கிறான் ...
என் சின்னச்சின்ன சேட்டைகளை
சலிக்காமல் இன்றும்
ரசிக்கிறான் ...
செல்லப்பெயர்களை மறவாமல்
செல்லம் குறையாமல் இன்றும்
அழைக்கிறான் ...
விரல்கோர்த்து உடல்பின்னி
காதலில் என்னை இன்றும்
உருக்குகிறான் ...
அனைத்தும் உணர்ந்து ஏங்குகிறேன்
இன்றுமட்டுமில்லை என்றும் - என் கனவில் !
-ஶ்ரீதனா
Comments