தாகம்...
- Sridhana
- Aug 29, 2020
- 1 min read
தேடித் தேடி பரிசுகள் கொடுத்து,
சிரிக்க வைக்க நாடகம் ஆடி,
உருகி உருகி குறுஞ்செய்தி தட்டி,
விடிய விடிய மௌனம் பேசி,
தயங்கித் தயங்கி அருகில் நின்று,
தவிக்கத் தவிக்க முத்தங்கள் பகிர்ந்து,
துடிக்கத் துடிக்க கலவி கொண்டு
தீர்வதை விட,
தள்ளி நின்று ...
அவள் வீசும்...
அசையா விழியின் ஓர்
ஆசைப்பார்வையில் தீரும்
அவன் - காதல் தாகம்!
-ஶ்ரீதனா

👌👏👏👏👏