திருமணமாகாமல் இருந்திருந்தால்!
- Sridhana
- Aug 10, 2020
- 1 min read
அப்பாவின் கால் வலிக்கு
சிறந்த மருத்துவம்,
அம்மாவின் தோல்நோயிர்க்கு
சரியான மருத்துவம்,
தேடித்தேடி கண்டுபிடித்து
உடல்குறையை சரிசெய்திருப்பேன்...
அம்மாவிற்கு பிடித்த பாடல்
எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும்
இசைஅமைப்பை செய்திருப்பேன்...
பெரியாத்திரையில் புதியப்படமும்
அவ்வப்போது மோகன் பாடல்களும்
இளையராஜா இசைகளும் கேட்டிருக்க செய்திருப்பேன்...
சொகுசுக்காரில் ஜன்னலோரத்தில்
இயற்கையை ரசித்து பார்க்காத
இடங்களையெல்லாம் பார்க்கச்செய்திருப்பேன்...
அம்மாவின் அம்மா வாழ்ந்த வீட்டை சரிசெய்து
அம்மா அவர் அம்மாவின் நினைவில்
ஆசையாய் அசைபோட வைத்திருப்பேன் ...
அப்பா கட்டிய கயிறின் இருமுனை முடித்து
அம்மாவின் சொந்தங்களை அவிழ்த்த
சொந்தங்கள் அனைத்தையும்
அம்மாவிற்கு மீண்டும் சொந்தமாக்கிருப்பேன் ....
கைநிறைய பணம்குடுத்து,
வயிறுநிறைய -
மனசுநிறைய -
செலவுசெய்யுங்கள் என்று கூறியிருப்பேன்...
கடைத்தெருவில் நடக்கவிட்டு,
சின்னப்பிள்ளையின்
கண்கள் காட்சிப்பிடிப்பது எல்லாம் கேட்பதுபோல்,
அம்மா கேட்க்கும் அனைத்தையும்
அசராமல் வாங்கிருப்பேன்...
எனக்குப்பின், நான் வாழ்ந்த அறையில்
கூடியிருந்தோர் சுமையையும் குறைத்து
நல்லிடத்திற்கு அவர்களை அமர்த்தி - என்னை செதுக்கிய
கருவறையை குளிரச்செய்திருப்பேன் ...
அப்பா விரும்பும்,
ஆன்மிக புத்தகங்கள் பலவும்,
அத்தைகளின் ஆசையை தன் ஆசையாக நினைக்கும்
அப்பாவின் ஆசைகள் சிலவும் நிறைவேற்றிருப்பேன் ...
ஆடம்பர டுபடுபு மோட்டார்வண்டி வாங்கியிருப்பேன்...
இரண்டேநிற முடிகள் இருந்தும்,
பலநிற உடைகள் பலதரப்பட்ட வடிவமைப்பில் வாங்கித்தந்திருப்பேன்...
கைநிறைய காசுகொடுத்து - அப்பாவின் கையால்
வயிற்றுப்பசிக்கு திண்டாடும் பலருக்கு
வளங்கவைத்திருப்பேன்...
அப்பாவிற்கு வேண்டியவர் தேவையறிந்து
தேவையைத்தீர்க்க உதவிருப்பேன் ...
தானம் பல செய்ய நாளும்
நான் அவருக்கு உறுதுணையாய் நின்றிருப்பேன்...
கருசுமக்கும் எவருக்கும் வாயுக்குருசியாக
கருவில் இருக்கும் குழந்தையும் தன்
பத்துவிரலைச் சப்பும்படி - சமைத்துப்போட்டு
அப்பாவின் மனதை குளுரவைத்திருப்பேன்...
இருவரையும்,
ஆன்மிக பயணம் பல அழைத்துச்சென்றிருப்பேன்...
வானூர்தியில் வலம்வர வைத்திருப்பேன்...
தினமொரு நாவிற்கு ருசியான உணவையுண்டு,
உலகத்தைச்சுற்றி காட்டிருப்பேன்...
இறுதிமூச்சு வரை
எவர்கையையும் எதிர்பார்த்து நிர்க்கமால்
என் வாழ்நாள் எல்லாம் உங்களுக்காகமட்டும்
என்று என்றும் வாழ்ந்திருப்பேன்...
என்
முடிவுக்கு பலரின் சம்மதம் வேண்டி,
மருகி மருகி நான் நிற்காமல் இருந்திருந்தால் ...
வாய்பேசமுடிந்தும் ஊமையாய் இல்லாமல் இருந்திருந்தால்
எனக்கு திருமணமாகாமல் இருந்திருந்தால்!
-ஸ்ரீதனா

திருமணம் ஆகாமல் இருந்திருந்தால்.. நினைக்கும் போதே பல பழையஆனந்தமான கனவுகள் நினைவில் வருகின்றன.