உறைந்து உருக்கும்...
- Sridhana
- Aug 30, 2020
- 1 min read
உச்சி முனையில்
தனிமையில் நின்றேன்,
உடல் உறையும் பனிக்காற்று,
உள்ளங்கைகள் தேய்த்தாலும்
உற்பத்தியானது மரத்தவுணர்வு...
வாய்வெளிவிட்ட மூச்சுச்சூடும்
உளவும் பனியில் மூச்சுத்தினறியது...
விட்ட மென்மையான மூச்செல்லாம்
பெருமூச்சானது...
பெருமூச்சும் இடைவேளை
அதிகம் கேட்டது...
எனக்கென வாழ்பவன்,
எனைத்தேடுவான்,
எனைப்பிரிந்து வாடுவான்
என்று மூளைப்புலம்பியது..
உறைந்த உடல் வெதுவெதுப்பில்
உலர்ந்தது...
இரு கை போர்வைக்குள்
என் உடல் புதைந்தது...
வெளியிட்ட சூடான மூச்சுக்காற்றில்
என் மூச்சும் சீரானது...
காதோரத்தில் மட்டும்
சமயிடைவேளையில் இடியிடித்தது...
கூர்ந்து கவனித்தேன்
என் பெயர் உச்சரித்தது..
என்ன மாயம் இது?
மெல்லச்சிர்த்தேன்...
“இந்தச் சிரிப்பில் தான் நான்
மயங்கினேன்”
என்ற குரலோடு
இதழ்முத்தம் திறந்தது என் விழியை...
அவன்
மார்போடு என்னை சேர்த்தணைத்து
இருகைகளால் என்னை
கட்டியணைத்து
அவன் வெளியிட்ட
மூச்சுக்காற்றில்
நான் குளிர்க்காய்ந்துள்ளேன்...
அவன் பார்வை என்னை
என்னவென்று கேட்க
“கனவொன்று கண்டேன்,
தனிமையில் நின்றேன்!”, என்றேன்..
“என்னவளே,
உன்னையென்றும் தீண்டாது
தனிமை...
என் இறுதிவரை நான் இருப்பேன்
எனக்குப்பின் என் வித்திருக்கும்
இல்லயேல்
இயற்கையோடு இணைந்து
என்னை உணரச்செய்வேன்!”,
என்றதும்
புதைந்தது போர்வைக்குள்
இரு தேகமும்!
-ஶ்ரீதனா
😍
Sema.. 👏👏😍😍😘😘