மகளிர் தினநல்வாழ்த்துக்கள்!
- Sridhana
- Mar 8, 2021
- 1 min read
கருவறைக்கொண்ட
கண்மணிகளுக்கு
மகளிர் தினநல்வாழ்த்துக்கள்!
படைக்கும் பிரம்மனின்
நகலான மாந்தர்களுக்கு
மகளிர் தினநல்வாழ்த்துக்கள்!
உயிர் எழுத்தில்லாமல்
தமிழ் இல்லை
அனைவரின் வாழ்க்கையின்
அஸ்திவாரமான மகளிர் இல்லாமல்
உலகமே இல்லை...
அனைத்து மகளிர்களுக்கும்
மங்கையர் தினநல்வாழ்த்துக்கள் !
பருவம் ஒவ்வொன்றிலும்
சாதனைகள் பலப்படைக்கும்
அனைவரின் உயிர்நாடியான
பெண்மணிகளுக்கு
மங்கையர் தின நல்வாழ்த்துக்கள் !
வழிமுழுதும் வலிகள் ஆயிரம் இருந்தும்
விழியில் புன்னகைமட்டும் வீசி
வெற்றிவாகை சூடும்
கண்மணியான பெண்மணிகளுக்கு
மகளிர் தினநல்வாழ்த்துக்கள் !
உயிர்கொடுத்து உயிர்காக்கும்
மங்கையர் அனைவருக்கும்
மகளிர் தினநல்வாழ்த்துக்கள் !
-Sridhana
Comments