வரமா ?
- Sridhana
- Sep 14, 2021
- 0 min read
பிடித்தது எல்லாம் கிடைத்தால்
பிடித்தவரெல்லாம் அருகிலேயே இருந்தால்
அதுதான் வரமோ?
இல்லை -
பிடித்ததோ பிடித்தவர்களோ
ஏங்கி தவித்து
உருண்டு புரண்டு
முட்டி மோதி
என்றாவது அதிசமாய் கிடைத்து
நம்மோடே நிலைத்து இருந்தால் - அது வரம் !
Comments