top of page

வலியின் உச்சியில் இருக்கிறேன் !

  • Writer: Sridhana
    Sridhana
  • Dec 18, 2020
  • 1 min read

வலியின் உச்சியில் இருக்கிறேன்,

நான்

உயிர் விடும் நிலையில் இருக்கிறேன் ...

கத்திக்கதறி அழ இடமில்லாமல், மண்டையோட்டுக்குள்ளேயே

புரண்டு புரண்டு புலம்பித்தள்ளுகிறேன் !


என் பக்க நியாயம்

எடுத்துரைக்க ஆளில்லாமல்

அனாதையாய் உளறுகிறேன் !


என் மனம்படும்பாட்டை

உணரமுடியாத உலகத்தில் நான்

உயிரிருந்தும் இல்லாமல் உலவுகிறேன் !


கடந்தப்பிறவி பலன்தானோ

என்னை இப்படி கட்டிப்போட்டு அடிக்கிறது ?


அப்பப்பா இதற்குமேல்

என்னால் எதுவும் முடியாது

என்ற நிலையில் இன்று நான் !


இருந்தும் - அடுத்த பிறவியாவது

வாழ்க்கை வாழ்க்கையாக இருக்க

இந்தப்பிறவியில்

புண்ணியம்

செதுக்கப்போகிறேன்

என் பிறவி கணக்கில்!


இதற்காகவாவது,

வாழ்க்கை வாழ்ந்தேயாகவேண்டும் ... !


வலியின் உச்சியில் இருந்தாலும்,

வலியைப்பழகி,

வாழ்க்கை வாழ்ந்தேயாகவேண்டும் ... !


-ஸ்ரீதனா



ree




Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page