அப்படியும் சிலர்.. ம்ம்...!
- Sridhana

- May 27, 2020
- 1 min read
பெற்றோர் அனைவரும் தவம் பல செய்து
இன்ப வலியோடு பெற்றார்கள்...
உச்சந்தலையில் அவள் உள்ளங்கால் பதித்து
உள்ளமுழுதும் பூரித்தவர்கள்...
மொத்தபாசம் மிச்சமில்லாமல் கொட்டித்தீர்த்து,
தீர்ந்த பாசம் மீண்டும் சுரக்கச்செய்து
தன்னை மறந்து
அவளைக் கொஞ்சிக் கொஞ்சி
மார்போடு சேர்த்தனைத்து
மலர்போல் பொத்திப் பொத்தி
பவளமேனியாய் வளர்த்தார்கள்...
ஈன்ற நாள்முதல்
அவள்
இல்லறவாழ்க்கை முதல்நாள் வரை
பெற்றோரும் சுற்றாரும்
போற்றிப் போற்றி வளர்த்தார்கள்...
பெற்றோர் வீட்டில்
பேசிய தைரியப் பேச்சு,
புகுந்த வீட்டில் திமிர்பேச்சானது...
தன் கருத்தை வெளிப்படுத்தும்
தனித்துவப் பெண் எதிர்த்துப்பேசும்பெண்ணானாள்...
செல்ல விளையாட்டும் கேலிக்கூத்தானது...
சமைத்த அறுசுவையும்
நாவில் படாமலே குப்பைத்தொட்டி பார்த்தது...
இட்டப்பெயர் மறக்குமளவிற்கு செல்லப்பெயர்ஆயிரமும்,
இதயம்வலிக்கும் கடும்பெயரானது...
உடல் வலியறியாத மேனியும்
பெற்றவர்க்காக விழிவழிக்காட்டாத வலிசுகமானது..
செய்யும் செயல் ஒன்றே அன்றும் இன்றும்,
என்றும் ஏற்பவர் மனம்தான் வேறு!
இன்னும் உண்டு ஆயிரம்
சொல்லச்சொல்ல
பொங்கி எழுந்திடும் அத்தியாயம்!!
புகுந்தவீட்டில்
மகளாக வாழ்ந்தாலும்
மறுமகளாக மட்டும் பார்க்கும்
மறுபக்கங்கள்!!!
பெற்றோர் மட்டுமே
பெற்றவளை விட்டுக்கொடுக்காதவர்கள்ஆகமுடியும்
புதியவுறவனைத்தும்
மற்றவர்கள் என்றும் விட்டுவிலகுபவரே...!!!



Unamai..