இறைவணக்கம்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
ஒருமுறை பிறப்பித்து- என்னை வாழச்செய்தாய்... மறுமுறை சுவாசிக்க- நீண்ட ஆயுள் தந்தாய்... பால்குறி மறைக்க- நல் உடையும் தந்தாய்... உடலுறுப்புகள் பணிபுரிய-
சுவை உணவும் தந்தாய்... நற்சொல் கேட்க செவியும் தந்தாய்... பொற்சொல் பேச செவ்வாயும் தந்தாய்... பயணங்கள் தொடர்ந்திட வேகமான கால்களிரண்டு தந்தாய்... உழைத்து உயர்ந்திட வலுவான கைகளிரண்டு தந்தாய்... சிந்தித்து செயல்பட பொறுமையோடு ஞானம் தந்தாய்... இறைவனே, நீ தந்த வாழ்க்கை இந்த வாழ்க்கை போதும்... நீ சொல்லும் வழி நின்று வெல்லும் வழி பார்ப்பேன் !!!
#ஸ்ரீதனா



Comments