ஏங்கியக்காதல்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
மறவாமல்
சுவாசிக்கும் என் இதயம் -
உன்னை
மறவாமல் நேசிக்கும் !
அடுத்த நொடி மரணம்
என்றெண்ணி
இந்த நொடி காதலிப்பேன்
வெறித்தனமாக உன்னை!
தவம் பல செய்தாலும்
கிடைக்குமோ
உன் அன்பிற்கு இடான வரம் !
மனதால் உருகி,
உடலால் வருந்தி,
கருவிழியைத் தழுவி...
இருவிழியோரம் வெம்பி வரும் கண்ணீரில் தெரிந்துகொள்
நான் தாண்டிய வழிகள் அல்ல வலிகள்
அனைத்தையும்,
துடைக்க
உன் விரல்கள்போதும்
என் புத்துணர்ச்சிக்கு!
இனி வாழும் நாட்கள்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
நமக்காக அழகிய
புது உயிரும் :-)
#ஸ்ரீதனா



Comments