காலை வணக்கம்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
நடந்தவை யாவும்
கனவாக மறையட்டும்...
நடப்பவை யாவும்
படைப்பாய் மலரட்டும் !!!
உடலில் பலமில்லை எனினும்
உள்ளத்தில் உறுதி கொள்...
அது
உயரத்திற்கு செல்ல ஊக்குவிக்கும் ...
உணர்ச்சிகளும் பல கலந்திருக்கும் ... !
அழகானப் பகலவன் -
உன்
ஆற்றல் மிகுந்த
படைப்பிற்காக
காத்திருக்கிறான்...!
சோம்பல் முறித்து..
சோகம் துறத்தி..
உலகில்
சுவாசிக்காத மூச்சுக்காற்றை யோசிக்காமல் சுவாசிக்க
நேசத்தோடு வா...
இந்நாளை உன்னோடு
சேர்ந்து நானும்
வாழ்கிறேன்... !



Comments