கடற்கரையின் ஓயாக்காதல்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
செல்ல முத்தம் நித்தமிட்டு
மோகக் காற்றில் சத்தமிட்டு
வெண்ணிற நுறையான பூவுமிட்டு
முத்துகொண்ட சிற்பி பரிசுமிட்டு
வித்தைகள் பல காட்டி
காதல் சொல்லப் பொங்கிவரும்
அழகு அலைகள்...
காதல் ஏற்றால்
இனிக் கிடைக்காது
இந்த கொஞ்சல்
என்று எண்ணி
ஏங்க வைக்கும்
கடற்கரை...
காதல் ஏற்கப்போவதில்லை
அலைகள் ஓயப்போவதுமில்லை !
#ஸ்ரீதனா



Comments