top of page

கருவுற்றிருக்கும் தாய்

  • Writer: Sridhana
    Sridhana
  • Apr 30, 2020
  • 1 min read

உன் உயிர் உன் இரத்தம் உன் காதலின் அடையாளம் உன் உடலோடு ஒன்றி மலருகிறதோ... நினைத்தாலே மலரும் உன் அழகுமுகம் புன்னகையில் :) பெற்றெடுக்கும் வழியை நினைவில்கொள் - இருக்கும் வலி கடுகைப்போல் தெரியும்... பெற்றெடுக்கும் நொடியில் நினைவில்கொள் - பத்து மாதம் நீ கடந்த பெரிய வலிகள் அனைத்தையும் :-) சேயின் கொஞ்சும் சிரிப்பில், தாயின் நெஞ்சம் மகிழும்...

பிஞ்சு குழந்தையின் நுனி விரல் தீண்டலிலே, பனி போல் மறைந்துவிடும் நீ படும் வலிகள் அனைத்தும்... சுகமான சுமை... சுமையில்லா சுகம்... இரண்டும் உணர்வாய் உன் கரு உன் உருவுக்குள் வளர்கையிலே ! உடலால் நீ சுமந்தாலும் உன்னையும் சேர்த்து சுமக்கும் ஜீவன் ஒன்று !


Recent Posts

See All
உருகி ஊற்றுதடி…

மறக்க நினைக்கும் கவலைகளை மண்ணுக்குள் புதைக்கிறாய்... சிரிக்க மறந்த நாட்களை மீண்டும் அழகாய்த் தருகிறாய்... அகவை ஏறினாலும் - இதயத்தை...

 
 
 
நிம்மதியான நிமிடம்

இன்பம் துன்பம் இரண்டிற்கும் இடையே வாழும் நிமிடம் மட்டும்தான் நிம்மதியான நிமிடம்…! உலக மேடையில் உறவுகளின் நாடகத்தில் நாமும் ஒரு பொம்மை...

 
 
 

Comments


Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page