செல்லத்தோழி
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
நான் வாழ்ந்த நாட்களின் ஏக்கம் தனித்தவள்...
என்னால் சிரித்தவர்கள் பலர்,
என்னைச் சிரிக்க வைத்தவள்...
மனம் நிறைந்து மூச்சினில் கலந்து,
மனம் மகிழ வைத்தவள்...
சுட்டுக் கொல்லும்
கடும் வார்த்தைகள் நான் பேசினாலும் -
மார்போடு என்னைக் கட்டி கொள்ளும் என்னவள்...
இனி வரும் நாட்கள்,
அவள் நினைவில் அவள் அருகினில்
அவள் சிரிப்பினில் அவள் துணையோடு
அவள் உயிருக்குள் வளரும் உயிர்களோடு
அவர்களுக்குத் துணையாக அவள் மனதில் ....
என் உயிரினில் கலந்த என் தோழியோடு
என் தோழியின் நினைவின் ஓரத்தில்
என்றும் நான் வாழ வேண்டும்...!!!



Superb Thozhiye..