நட்பே நட்பே
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
நீ சொல்லி நான் கேட்டேன்,
என் பெற்றவர் சொல்லிக்கேளாமல் !
உன் தோலில் நான் சாய்ந்தேன்,
என் தந்தை தோல் இருந்தும்!
உன் மடியில் நான் படுத்தழுதேன்,
என் அன்னை மடி இருந்தும்!
உன்னிடத்தில் நான் அடிபட்டேன்,
என் உடன் பிறந்தோர் இருந்தும்!
உன்னுடன் நான் விளையாடினேன்,
என் வீட்டு நாய்க்குட்டிகள் இருந்தும்!
தோழா / தோழி,
உன்னுடன் தயக்கமின்றிப் பகிர்ந்தேன் அனைத்தும்,
என்னுடன் சரிபாதி திருமண உறவிருந்தும்!!!
உதிரமில்லா உடலுமில்லை...
நட்ப்பில்லா மனிதருமில்லை...
நீ இல்லாமல் நானுமில்லை ...!!!
#ஸ்ரீதனா



Comments