பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
உலகில் நீ
உதித்த நாளோ இன்று...
என் தங்கையே,
உன்னை வலியோடு பெற்றெடுத்த நாளோ இன்று...
உன்னைப் பார்த்த
முதல் பார்வையில்
ஆனந்த வெள்ளத்தில்
அனைவரும் ஆழ்ந்த நாளோ...
நுனிவிரல் நுணுக்கங்கள் நூறு...
கைவிரல் கலைகள் ஆயிரம்...
பலவுண்டு திறமைகள்
உமக்கு பாராட்ட !
இனி வரும்
இந்தநாள்
இனிய நாள்
உன்னைத்தேடும் உறவுகளோடு...
நானும் சேர்ந்து
உணர்ச்சிகள் பொங்க
உற்சாகமாய் கொண்டாடுவோம்
என் செல்லமே...
அளவில்லா ஆசை
உன்னோடு நானிருக்க
வின்னோடு பறந்து
இந்நாளில்
என் வாழ்த்துக்கள்
உன் மழலை
இதயத்தோடுசேரட்டும்!!!



😍😍