பண்டம் மாற்றுவோம் !
- Sridhana

- May 17, 2020
- 1 min read
பண்டம் மாற்றுவோம்
நம்பி மாற்றுவோம்...
தரமான பண்டத்திற்கு
நிகரான பண்டமாற்றுவோம்...
மதிப்பை அறிந்து மதிப்பிடுவோம்
மதிப்பிற்கேற்ற மதிப்பளிப்போம்...
இருக்கட்டும் இருக்கட்டும்
சிறிது லாபம் - அனைத்தையும்
தலைமைத்தாங்கட்டும் மனிதநேயம் !
வறுமை வாட்டி வதைக்கையிலும்,
மாற்ற உடைமை இல்லாவிடினும்,
பண்டம் மாற்றி மகிழ்வோம்
மனிதம் போற்றி புகழ்வோம்
செழிப்பாய் வாழ்ந்திட அல்ல
உயிரோடு மனிதர் வாழ்ந்திட !



Nice da.