முதியவரின் வேண்டுகோள்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
பற்களும் இல்லை
தெளிவானச் சொற்களும் இல்லை!
தள்ளாடும் நடையும்,
அல்லாடும் மனமும்...!
பணம் தேவை இல்லை
பதவித் தேவை இல்லை...!
ஒரு பிடி சாதம் போதும்
அன்புக் கரங்களினால் ...!
என் மனம் ஆறும்
அந்தப் பாசத்தினால்...!
வந்த இடமோ கருவறை
செல்லும் இடமோ கல்லறை!
அன்றாடம் வேண்டுகிறேன்
ஆனந்தமாய் உயிர்ப்பிரிய...!
உயிர்ப்பிரிந்தபின்பும் வேண்டுவேன் -
உறவுகள் அனைத்தும்
உல்லாசமாய் வாழ!
இறைவா,
ஏற்பாயோ
இந்த
முதியவனின்
வேண்டுதலை ???
#ஸ்ரீதனா



Comments