மரணித்து மீண்டும் வந்தவன்
- Sridhana

- Jun 6, 2020
- 1 min read
செய்யாததை செய்துமுடிக்க
செத்து மீண்டும் மீண்டு
வந்த உள்ளம் துள்ளும்!!!
—————————————
வழியில்லாமல் உடல்நீக்கி,
உயிர் வாழ்ந்திட -
வலிகொடுக்காமல் வாழ்ந்திடு!
—————————————
இல்லாததைத் தேடும் மனம்
இருப்பதை தொலைத்துவிடும்!
—————————————
அடுத்தநொடி என்னவென்று
தெரியாது நகரும் நாட்கள் -
அடக்கத்திற்கு பின்
தெரிவது எட்டாத கானல்நீர்!
—————————————
சித்தனுக்கு கூட
பித்துபிடிக்கும்
உடல்விட்டு உயிர்போகும்
வழி(லி)யை இன்று யோசித்தால்...
—————————————
ஒரு நொடிக்கூட அயராமல்
உன் உயிரை அரைத்தெடுப்பேன்
உன் கண்களுக்கு தெரியாதபடி!
—————————————



Comments