வறுமைக்குழந்தைகளின் குமுறல்
- Sridhana

- Apr 30, 2020
- 1 min read
கருத்து வேறுபாடு,
நிற வேறுபாடு,
மொழி வேறுபாடு,
மத வேறுபாடு,
குண வேறுபாடு,
பண வேறுபாடு,
இன்னும் பல வேறுபாடுகள்...
எதை சாதிக்க இத்தனை வேறுபாடுகள்
படைத்தாயோ என் இறைவா?
பிழை அனைத்தும்
நீ செய்து,
தலை எழுத்தென்று அனைவரையும்
புலம்பச்செய்கிறாய்...!
நுனி குடல் நனைய
துளி நீரில்லாமல் துடி துடித்து
வாழும் வாழ்க்கை -
வறுமை வாழ்க்கை...
போதும் போதும்
என் இறைவா!
வலியிள்ளாமலாவது
எடுத்துக்கொள்
என்னை உன்னிடம்...!
நித்தமுண்டு இந்த குறல் -
வறுமையில்
பிறந்து,
வளர்ந்து,
வாழ்ந்துகொண்டிருக்கும்
சிறு குழந்தைகளின் குமுறல்...!!!



Comments