top of page

கல்லாக இருந்த என்னை செதுக்கிய அழகிய இடம்!

  • Writer: Sridhana
    Sridhana
  • Jul 17, 2020
  • 3 min read

Updated: Jan 5, 2021

அடிச்சு புடிச்சு ஒருவழியாக பள்ளிப்பருவத்தை முடித்து கல்லூரிக்குள் கால் வைத்துவிட்டோம். முதல் நாள் எதிர்காலத்தை பற்றி இருந்த ஆர்வத்தை விட, எத்தனை பள்ளித்தோழிகள் இங்கு சேர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருந்தது. படித்த பள்ளியும் மகளிர் பள்ளிதான் சேர்ந்த கல்லூரியும் மகளிர் கல்லூரி. எங்கள் கல்லூரி விருதுநகரில் புகழ் பெற்ற கல்லூரி. தொண்ணூறு சதவிகிதம் பார்த்து பழகிய முகங்கள் தான் ஆசிரியர்களைத்தவிர.


பழகிய தோழிகள் எல்லாம் ஒருபுறம், புதிதாக சேர்ந்தவர்கள் எல்லாம் ஒருபுறம் என்று இருந்தோம். நாட்கள் நகரநகர கடலில் கிடைக்கும் சிப்பிபோல் ஆனோம்.


ஆட்டம், பாட்டம், கருக்குமுறுக்கு கேன்டீன் நேரங்கள் என்று பகிர்வதற்கு அதிக சுவாரசியமான விசயங்கள் இருந்தும் கற்ற கல்வியை பற்றி தான் நான் முதலில் சொல்ல விரும்புகிறேன்.


இவ்வளவு நம்பிக்கை எனக்குள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வளர்வதற்கு காரணம் எனது விரிவுரையாளர்கள் கொடுத்த அடிப்படைதான் காரணம். ஆமாம், சிறந்த முறையில் கற்றுக்கொடுத்தது நான்கு விரிவுரையாளகர்கள் தான். நான்குபேரும் நான்கு தூண்கள் B.Sc கணினி அறிவியல். பழைய மேசை கணினி (டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்) தான் இருக்கும் எங்க கணினி ஆய்வகம் (கம்ப்யூட்டர் லேப்). ஆனா கத்துகிட்ட அடிப்படை கல்வி அங்குதான். விரிவுரையாளர்கள் கற்பிற்கும் விதமே எங்களை அந்த உலகிற்குள் கொண்டு செல்லும். எதைபடிக்கவேண்டும் மட்டும் சொல்லித்தரவில்லை, எப்படி கற்கவேண்டும் என்ற சூத்திரத்தையும் மனதில் பதியச்செய்தார்கள். படிப்பதற்கும் கற்பதற்கும் உள்ள நூலளவு வித்யாசம் அறிந்தது என்னுடைய கல்லூரியில் தான். உலகத்தில் எந்த மூளைக்குசென்றாலும், எந்த மனிதர்களிடையே வாழ நேர்ந்தாலும் நாங்கள் எங்கள் தன்னம்பிக்கை சிறிதும் குறையாதவாறும், கற்றகல்வி என்றும் மனதிலேயே பதியுமாறும் கற்றுக்கொடுத்தார்கள். ஆம், எங்களுக்கு நிறைய செமினார் கிளாஸ்ஸஸ் நடத்தினர், எங்கள் மனதில் இருந்த பயத்தையை அகற்றி தன்னம்பிக்கை என்ற வித்தை ஆழமாய் பதித்தனர். சரியோ, தவறோ தயக்கமில்லாமல் மனதில் தோன்றியதை முழுநம்பிக்கையோடு தெளிவாக எடுத்துரைக்க கற்றுக்கொடுத்ததும் அவர்கள்தான். கண்டிப்பும் கலகலப்பும் சரியாக பயன்படுத்தி எங்களை செதுக்கியர்வர்கள்.


மகளிர் கல்லூரியில் என்ன ஆட்டம் இருக்கப்போகிறது என்று கண்டிப்பாக நினைக்கத்தோன்றும். உண்மையில் பையன்கள் கூட இவ்வளவு ஆட்டம் போட்டிருக்கமாட்டார்கள். அவ்வளவு ஆட்டம்! என் பிறந்தநாள் அன்று, எனக்கு இன்ப அதிர்ச்சி தருவதாக எண்ணி, எங்கள் வகுப்பு தோழிகள் அனைவரும் சேர்ந்து கணினி ஆய்வகத்துக்குள்ளயே (கம்ப்யூட்டர் லேப்), அங்கிருந்த கணினிகளுக்கிடையே கேக் வெட்ட, கேக்கின் மேல் மெழுகுவர்தியெல்லாம் ஏற்றினார்கள். ஒருபுறம் இன்ப அதிர்ச்சியோடு நான் ஆய்வகத்துக்குள் நுழைந்தேன் இன்னொரு கதவுவழி எங்க மேடம் நுழைந்தார்கள். "மொத்த கிளாஸ்சும் கெட் அவுட்" மட்டும் தான் வந்தது மேடமிடமிருந்து . இது போல் சிக்கும்பொழுதெல்லாம் "படிக்கத்தான் இங்க வருகிறீர்கள்!" என்று நியாபகம் படுத்திக்கொண்டே இருப்பார்கள்.


அக்கினி நட்சத்திர வெயில் சுட்டெரிக்கும் வகையில் கொளுத்தினாலும், நூறுபேர் நிற்கும் அகலத்திற்கு ஒரு மரம் படர்ந்து ஓங்கி நிக்கும் எங்களது வகுப்பின் அருகில். அந்த மரத்துநிழலும் காற்றும்தான் எங்களது ஏசி அறை. தினம் தினம் விதவிதமாக விருந்து சாப்பிடுவது அந்த மரத்தடி நிழலில்தான். இந்த நாட்கள் பாட்லக் (Potluck) விட மிக சிறப்பானது என்றால், அது எங்களது தரைவட்ட (இந்த காலத்து வட்டமேசை) விருந்து; வட்டத்தின் நடுவில் ஆறு ஆட்கள் படுத்துக்கொள்ளலாம், அவ்வளவு பெரிய வட்டமாகஇருக்கும். ஏனென்றால் அத்தனை தோழிகள். என் தோழிகளின் அம்மா தோழிகளுக்கு மட்டும் சாப்பாடு கொடுத்துவிடமாட்டார்கள், எங்களுக்கும் சேர்த்துதான் எப்பொழுதும் தருவார்கள். என் அம்மாவும் கூட. என் சாப்பாட்டு பாத்திரத்தில் முதல்வாய் நான் எடுத்து சாப்பிட்டு தோழிகளிடம் சுத்திவிட்டால், காலியான டப்பா தான் திரும்ப என் கைக்கு வரும். எனக்குமட்டுமில்ல எல்லாருடைய டப்பாவும் அவர்களுக்கு அப்படித்தான் போகும். வயிறே குழம்பிப்போகும் என்னவெல்லாம் சாப்பிட்டாள் இவள் என்று.


சோகமாகயிருந்தாலும் சந்தோசமாகயிருந்தாலும் நாங்கள் போகும் ஒரேயிடம் கேன்டீன் தான். கோன் ஐஸ்கிரீம் மட்டும் தான் எல்லாருடைய விருப்பமான விசயம் கேன்டீன்ல. கேன்டீன் அக்கா என்னைப்பார்த்தால் மட்டும் கோன் கீழ்வழியாக பிய்த்துக்கொண்டுவரும் அளவிற்கு கிரீம் வைத்துத்தருவார்கள். அந்த கிரீம் நாவிற்பட்டதும் தனிருசியும் குளிர்ச்சியும் இருக்கும், தொண்டைவழியா குளிர்வண்டி சில்லென்று உடலுக்குள் போவதுபோல் இருக்கும். அனைவரும் சேர்ந்துதான் செல்வோம் கேன்டீன்க்கு ஆனால் வருகையில் வேறு தோழிகள் எதிரில் பார்த்து என்னை மீண்டும் அவர்களோடு அழைத்துச்செல்வார்கள். இப்பொழுதுதான் ஐஸ் கிரீம் சாப்பிட்டோம் என்றக்கூச்சம் சிறிதும் இல்லாமல் மீண்டும் அதே கோன் ஐஸ் கிரீம் தான் வாங்குவேன். எத்தனைமுறை சாப்பிட்டாலும் திகட்டாதது; எத்தனைமுறை நினைத்தாலும் கூட.


இரண்டாம் மேசையில் நான் இருப்பேன் முதல் வரிசையில் இருக்கும் தோழிகளின் சடைகளை, மேடம் கண்ணில் படாதவாறு அவிழ்த்துவிடுவேன். பின்னால் திரும்பினால் எல்லாரும் சிக்குவோம், அதனால் திரும்பவும் மாட்டார்கள், திரும்பி என்னைத்திட்டவும் முடியாது. அதில் ஒரு கிளுகிளுப்பு. வகுப்பு முடிந்து மேடம் வெளியே சென்றதுதான் சரி, சரமாரியாக திட்டுவிழும் அடியும்விழும். சிரித்துக்கொண்டே வாங்கிக்கொள்வேன் ஏனெனில் அதில் முழுஅன்புமட்டும் தான் இருக்கும். கல்லூரி பஸ் ஏற வரிசையில் நிற்பதும், நான் மட்டும் நடுவில் புகுவதும், அவ்வப்போது எங்கள் ஜூனியர் பிள்ளைகளின் வகுப்புக்குள் போய் அவர்களிடம் அன்பான கண்டிப்புகள் வைப்பதும், பொங்கல் திருவிழா, ஒரேமாதிரியான வண்ணத்தில் புடவைகள், கல்லூரி நாள் கொண்டாட்டங்கள் என பல நினைவுகள் என் மனதையும் இதழையும் சிரிக்க வைக்கிறது.


புத்தக நகல் எடுக்கும் கடையில் நகல் எடுக்கும் வேலை (xerox), மாலையில் கம்ப்யூட்டர் கல்வி இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியர் வேலை என பல செய்துதான் என்னுடைய கல்வி கட்டணத்தை செலுத்தவேண்டியிருந்தது. மூன்று ஆண்டுக்கல்விக்கு மொத்தமாக முப்பதாயிரம் செலவாயிருக்கும். (ஆனால் இன்றைய சூழ்நிலையில் முதல் வகுப்பின் இரண்டு தவனையே நாற்பது ஆயிரத்தை தாண்டிவிட்டது). என் அன்புத்தோழிகள் என்னுடன் என்றும் துணைநின்றனர், இன்றுகூட!


வேலைவாய்ப்பு பெற எப்படி தயார் செய்யவேண்டும் என்று திரு. ரெங்கசாமி அவர்கள் எங்களுக்குள் இருந்த தாழ்வுமனப்பான்மையை போக்கினார். சரியான வழிகாட்டியும் நமக்கு தேவை, அதற்கு திரு. ரெங்கசாமி அவர்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பலர் தேர்ச்சிப்பெற்றோம், சிலர் மேல்படிப்பு, சிலர்க்கு தேர்ச்சிபெற்றும் அழைப்புவரவில்லை. கடலில் கிடந்த சிப்பியாக இருந்த நாங்கள் எங்களுக்குள் இருக்கும் முத்தை வெளியேகொண்டுவர தொடங்கினோம். ஒவ்வொரு முத்தும் ஒவ்வொரு தனித்துவ அழகு. கஷ்டப்பட்டு கிடைத்த அந்த வேலை, என் வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு என்னை கொண்டுசென்றது.


வந்த வழியும் அனுபவித்த வலியும் என்றும் நினைவிலேயே இருக்கும். என்னைப்போல் கஷ்டப்பட்டவர்க்கு முடிந்தவரை புத்தக உதவியோ, கல்வி கட்டண உதவியோ செய்து தேவையில் இருப்போர்க்கு உதவ உந்துகிறேன்.

நானும் என்னால் முடிந்தவரை செய்கிறேன். உதவியாக எண்ணி அல்ல என் கடமையாக எண்ணி! செய்ததை பகிர்வது, விளம்பரத்திற்காக இல்லை பலர்க்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு.


நாம் வளர்ந்தால் மட்டும் போதாது; நம்மைச்சார்ந்தவர்களும் நம்மோடு சேர்ந்து வளரவேண்டும். என் தோழிகள் மாதிரி எல்லாருக்கும் கிடைத்தால், எந்த சூழ்நிலையிலும் வாழ்க்கை சிறப்பா போகும்.



-ஸ்ரீதனா

Recent Posts

See All
#சாரா- வின் சமநிலையின் தொடக்கம் !

சூரியஒளி கண்களில் விழ விடிந்தது அழகிய காலைப்பொழுது தேவிக்கு. சிறிது நேரத்தில் காலை தேநீருடன் சூரிய ஒளியில் அமர்ந்த அவளின் சிந்தனை ஏனோ...

 
 
 

6 Comments


Sri Dhana
Sri Dhana
Jul 18, 2020

Thank you for your feedback.. Encourages me a lot !!!!!!!!

Like

SB
Jul 18, 2020

Same question arise to me too, how do you find time?


Nostalgic! Looks like you have enjoyed college days To the core along with pains.


Even our friend’s mom serve us the food as their children but we hadnt time to praise them or write for them.


Well written and captured even our sweet memories too!

Keep rocking !

Like

Vidya
Jul 18, 2020

இத்தமிழ் பயனம் மேன்மேலும் வளரட்டும் ☺️💐

Like

Vidya
Jul 18, 2020

U took me to my good olden days... Keep rocking... But My only question is where do you find time for all these🤔🤔.. andha secret enakum sollunga Sree😊🤪

Like

BM
Jul 17, 2020

Everyone’s Beautiful college days! I had gone back with my good old memories.. and at the end very good message has been conveyed too ! Great writing and keep writing !

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page