#சாரா- வின் சமநிலையின் தொடக்கம் !
- Sridhana
- Apr 21, 2020
- 1 min read
Updated: Apr 24, 2020
சூரியஒளி கண்களில் விழ விடிந்தது அழகிய காலைப்பொழுது தேவிக்கு. சிறிது நேரத்தில் காலை தேநீருடன் சூரிய ஒளியில் அமர்ந்த அவளின் சிந்தனை ஏனோ அவளையும் அறியாமல் அவள் முந்தய தினம் கலந்துகொண்ட விழாவையும், அதில் "அவள் கொடுத்துவைத்தவள் அழகான வாழ்க்கை அமைய " என்று சொந்தங்கள் கூறிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தன.
ஏன் எப்பொழுதும் அதிர்ஷ்டமும் அதிர்ஷ்டமின்மையும் பெண்ணோடு மாத்திரம் பேசப்படுகிறது நம் சமூகத்தில்!! .. சுதந்திரமாய் வளர்க்கும் பெற்றோரிலிருந்து நம் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் கணவன் அமைவது முதற்கொண்டு எல்லாமே "நீ கொடுத்துவைத்தவள்" என்ற வாசகத்தையே பெண்ணை நோக்கி பேச வைக்கின்றன.. மீண்டும் மீண்டுமாய் சுற்றம் சூழ இருக்கும் ஒவ்வொருவராலும் சொல்லப்பட, "ஆம் இதெல்லாம் வாழ்வில் அமைய நாம் கொடுத்துதான் வைத்துள்ளோம் " என்ற எண்ணம் பெண்ணின் மனதிலேயே ஆழமாய் பதிந்து இருக்கும் அவல நிலையில் இன்றிருக்கும் பெண்கள் ஏராளம்.. ஏன் ஒரு ஆணை பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வருவதேயில்லை. இது ஒரு சமூகமாய் ஒரு பெண்ணை எங்கே எடுத்து சென்றுகொண்டிருக்கிறது ... எங்கே தவறுகிறோம் நாம் சமூகமாய் என்ற கேள்விகளை அல்லவா எழுப்புகிறது. கல்வியும் பெற்று அதன் மூலமாய் பல பாதைகள் அவர்கள் முன் திறக்கப்பட்டாலும், எல்லாமே அவளுக்கு கொடுக்கப்பட்டதாகவே பதியப்படுகிறது, அவளுக்கு உரிமையானது என்று பதியப்படுவதற்கு பதிலாக. பெண்ணுக்கு கிடைக்கும் அத்தனையும் அவளுக்கு கிடைக்க படவேண்டியவைகள் யாரும் கொடுக்கப்படவேண்டியவைகள் அல்ல என்பதை பெண்ணே மறந்திருக்கும் அவலநிலை. அதை பெண்ணிலிருந்து பெண்ணிற்கு கடத்தும் கடப்பான்களாய் பெண்ணே இருப்பது பெருமவலம.
இதெற்கெல்லாம் தீர்வு எங்கே தொடங்கும் என்று சிந்தித்தவாறே தேநீரை முடித்த தேவியின் செவியில் "அம்மா" என்ற அன்புக்குரல் கேட்க,மெல்ல திரும்பினாள். திரும்பிய அவளை அன்போடு அணைத்தான் அவள் ஐந்து வயது செல்ல மகன். மடியில் விழுந்த அவனே அவளின் சற்றுமுந்தைய தேநீர் நேரத்தின் சிந்தனை போராட்டத்திற்கு விடையாய்த் தெரிந்தான்..
ஆம்!! மாற்றத்தை தொடங்க வேண்டிய இடமாய் அவள் வீடு அவளுக்கு தெரிந்தது. சமநிலையை வீட்டில் உருவாக்கும்போது அது சமூகத்திலும் நாட்டிலும் பிரதிபலிக்கும்.
சாரா
“நீ கொடுத்துவைத்தவள்”
பெண்ணிய அடிமை
சமூகத்தின் இழிநிலை
ஒளவிய உச்சம்
கிடைக்கப்பெறாத ஏக்கம்
நீ கொடுத்துவைத்தவள் !!!
Nice.. First we should start the change nu correct ah point panathu pidichuruku...
Vazhthukkal Sara !