மறைத்த காதல் - பாகம் 1!
- Sridhana
- Apr 17, 2020
- 1 min read
Updated: Jul 1, 2020
பாகம் - 1 ஒலித்த மங்கள வாத்தியம் - நிச்சயித்தது துளசி - மாறன் இடையே நடக்கவிருக்கும் திருமணத்தை. எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்த உள்ளங்கள். இன்னும் விளக்கமாக சொல்லப்போனால் எதை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியாத எதார்த்தமான ஆணும் பெண்ணும். நட்பும் சொந்தமும் செய்த கேலியும் கும்மாளமும் ஒரு விதமான புது உணர்ச்சி அளித்தது இருவருக்கும். மோதிரம் மாற்றியதோடு புதுக்கைப்பேசியும் புது தொடர்பு எண்ணும் கிடைத்தது பரிசாக துளசிக்கு. மோதிரத்தின் அழகை சொந்தங்கள் வாழ்த்த வராத நேரத்தில் பார்த்து மெல்லச்சிரித்தாள். சின்னச்சின்ன உரசல்கள் அருகருகே நின்றதனால். கழுத்தில் கணத்த மாலை இருப்பினும் வெளியே காட்டாமல் சிரித்தபடி வந்தோர் அனைவருக்கும் வணக்கம் சொல்லி முகம் சுழிக்காமல் நின்றாள் துளசி. முகம் சுழித்தால் புகைப்படத்தில் வாழ்நாள் முழுதும் அசிங்கமாக பதிந்து நிற்கும் என்ற எண்ணமும் துளசியின் தோழி யாழினி சொன்னது நினைவுக்கு வந்தது. எல்லாம் புது உணர்வாக இருந்தது இருவருக்கும். சுற்றி இருப்போர் கொஞ்சம் தூரமாகவே தெரிந்தனர். பாடல் சத்தமும் உறவினர் கூட்டமும் குழந்தைகள் ஓட்டமும் அப்அப்பா எனப்பார்போர்க்கு இருந்தாலும் , காதோரத்தில் மெல்ல வந்து “பிடித்திருக்கிறதா உங்களுக்கு” என்ற கேள்வி ஒருநிமிடம் பதறச்செய்தது துளசியை. முகத்தை கூட சரியாகப்பார்க்கவில்லை எப்படி பிடித்திருக்கிறது என்று சொல்லமுடியும் என்ற கேள்வி 5 விநாடிகள் ஓடியது துளசிக்கு, இருந்தும் மாறனின் கேள்வியில் ‘உங்களுக்கு’ என்ற மரியாதையான வார்த்தை சிறு நம்பிக்கை கொடுத்தது, கொடுத்த மறுநொடி மோதிரத்தை பார்த்து சிரித்தபடி தலையைமட்டும் ஆட்டினாள் துளசி. “நான் என்னைப் பிடித்திருக்கிறதா என்று உங்களிடம் கேட்டேன் மோதிரத்தை அல்ல “ என்று மீண்டும் அதே முகமலர்ச்சியோடு துளசியிடம் கேட்டான் மாறன். மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்த துளசி உடனே ஷ்ஷ்ஷ் என்ற சத்தத்தோடு மாறன் விழிகளை நிமிர்ந்து பார்த்தாள்.
....காதல் தொடரும் !

நல்ல ஆரம்பம் டியர்🤗😊...
வாழ்த்துகள்
Very nice sis keep going