மறைத்த காதல் - பாகம் 32 !
- Sridhana

- Jul 4, 2020
- 2 min read
Updated: Jul 4, 2020
பாகம் 32 !
“வயிற்றில் கையை வைத்து தப்பிவிட்டேன் இன்று. ஆனால் நாளை மாறன் நிகழ்ந்ததை மறந்துவிட வேண்டும். ”, என்று வேண்டிக்கொண்டு உறங்க முயற்சித்தாள் துளசி. இருவரும் மனக்குழப்பதோடு கண்ணயர்ந்து உறங்கினர்.
மறுநாள் துளசி எழுவதற்கு முன்பே மாறன் எழுந்து கிளம்பி வெளியே சென்றான். துளசி எழுந்து பார்க்கையில் பணிப்பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தாள். வீடுமுழுதும் தேடியும் மாறனைக் காணமுடியவில்லை மாறனின் செருப்புகளையும் காணமுடியவில்லை. மாறன் வெளியே சென்றிருக்கிறான் என்பதை உறுதிசெய்துவிட்ட உடனே, துளசி கைபேசியை எடுத்து குறுஞ்செய்தி வந்த எண்ணுக்கு அழைத்தாள். கொஞ்சம் கடுமையான தோரணையில், "அவ்வளவு சொல்லியும் ஏன் குங்குமப்பூ வைக்க வேண்டும்.? நாங்கள் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடாது என்று நினைத்துவிட்டீர்களா?. நாளுக்கு நாள் மாறனுக்கு சந்தேகம் அதிகமாகிறது. என்னால் மாறனை சமாளிக்க முடியவில்லை. இத்தோடு நாம் அனைத்தையும் துண்டித்துக்கொள்வோம்." , என்று கூறி துண்டித்தாள் துளசி.
பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து மருத்துவரின் கருத்திற்காக காத்திருந்தான். எப்பொழுதும் பார்க்கும் மருத்துவர் இல்லாமல் புது மருத்துவர் இருந்தார் அங்கு, அவருடன் புது இரண்டு பெண் மருத்துவரும் இருந்தார்கள். மாறன் நிமிர்ந்து எவரையும் பார்க்காமல், கீழே குனிந்தபடி பேசத்தொடங்கினான். "நான்கு ஆண்டுகள் ஆகின எனக்கு திருமணம் நடந்து. எனக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தான் நான் திருமணம் செய்தேன். இந்த விசயம் துளசிக்கோ என் பெற்றோருக்கோ இதுவரை தெரியாது. இந்த விசயத்தை மறைத்தே நான் திருமணம் செய்தேன். தவறுதான், ஆனால் இதை பற்றி பேசி என் பெற்றோர்களை வருத்தத்தில் தள்ள எனக்கு விருப்பம் இல்லை. என் மனைவியும் இதுவரை எந்த ஒரு வார்த்தையும் குழந்தையைப்பற்றி என்னிடம் பேசியதில்லை இதுவரை, அதனால் எல்லாம் நன்றாகத்தான் நகர்ந்தது வாழ்க்கை. ஆனால் இப்பொழுது என் மனைவி குழந்தையை சுமந்துகொண்டிருக்கிறாள். அதற்கு தந்தை நான்தானா என்று உறுதி செய்யவேண்டும்.", என்று தயங்கித்தயங்கி பேசத்தொடங்கினான் மாறன். மாறனின் அமைதியை பார்த்து மருத்துவர் சகஜமாக பேசத்தொடங்கினார். "மாறன், உங்களின் குறைகள் எல்லாம் சரியாகிவிட்டது. உங்களுடைய பரிசோதனை சான்றிதழ்கள் எல்லாம் சரியாக உள்ளது இப்பொழுது. இந்த மாற்றத்திற்கு காரணம் நல்ல சாப்பாட்டு முறை, மனநிம்மதி கூட காரணமாக இருக்கலாம்", என்று மிக தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார் மருத்துவர்.
தீடீரெண்டு அருகில் இருந்த பெண் மருத்துவர், "உங்கள் உடலில் இருந்த குறை சரியாகிவிட்டது. ஆனால் உங்கள் மனதில் குறையுள்ளது. நீங்கள் எங்களிடம் சொன்ன வார்த்தைகள் தவறு. உங்களுக்கு தந்தையாகும் தகுதி வந்துவிட்டதா என்று கேட்டிருக்க வேண்டும் அதற்கு பதில் உங்கள் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீங்கள்தான் அப்பாவா என்று உறுதிசெய்ய வந்தேன் என்று சொன்னது தவறு, இது உங்கள் மனதில் உங்கள் மனைவியின் மீது உள்ள சந்தேகத்தை பளிச்சென்று காட்டுகிறது.", என்று கணீரென்று பேசினார். மாறனுக்கு சாட்டையடி அடித்தது போல இருந்தது. மெல்ல நிமிர்ந்து பார்த்தான் மாறன். அருகில் நிற்பது துளசியின் தோழி யாழினி என்று தெரியவந்தது. ஆண்டுகள் பல ஆனதும் மாறனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யாழினி அறிந்தாள். தூக்கிவாரி போட்டது மாறனுக்கு. என்ன சொல்லியும் தப்பிக்க முடியாது என்ற நிலையில் சிக்கிக்கொண்டோமே என்று தனக்குள்ளேயே புலம்பித்தள்ளினான். யாழினி முன் திருதிருவென குற்றஉணர்வில் மிரண்டுநின்றான் மாறன்.
"மாறன் அண்ணா, உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டியுள்ளது.", என்று கூறி அங்கிருந்த மருத்துவர்களிடம் இருந்து விடைபெற்று மாறனும் யாழினியும் வெளியே சென்றனர். "நீங்க இப்படி எல்லாம் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. உங்களுக்கு ஏன் துளசியின் மீது இப்படி சந்தேகம் வந்தது?", என்றாள் யாழினி. "முழுசந்தேகம் இல்லை.. கொஞ்சம் தான். அதுவும் குதர்க்கமான குறுஞ்செய்தி, இன்ப பரிசின்னு வரிசையா வரவும் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.", என்றான் மாறன். யாழினிக்கு சுர்ரென்று ஏறியது கோபம். "நான்கு ஆண்டு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளீர்கள், அதிகம் அன்பை பகிர்த்துள்ளீர்கள் அவளோடு, அவளும் உங்கள் மேல் பைத்தியமாகத்தான் இருக்கிறாள். இருந்தும் எப்படி இந்த சந்தேகம் மட்டும் மண்டைக்குள் ஆட்டம் ஆடுகிறது? பெண் என்றால் அசிங்கமாகத்தான் தோன்றுமோ உங்களுக்கு?", என்று வெளுத்து்வாங்கினாள் யாழினி.
தன்மேல் தவறு இருப்பதால் மௌனம் காத்தான், எதுவும் எதிர்த்து பேசவில்லை. "அண்ணா, உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று எங்களுக்கு உங்கள் நிட்சயதன்றே தெரியும்.", என்றாள் யாழினி. "என்ன தெரியுமா?, எங்களுக்கு தெரியும் என்றால்.. துளசிக்கு தெரியுமா?", என்று படபடப்போடு பேசினான் மாறன்.
-தொடரும்






NICE turning point.. Keep going. 👍