top of page

மறைத்த காதல் - பாகம் 30 !

  • Writer: Sridhana
    Sridhana
  • Jul 1, 2020
  • 2 min read

பாகம் - 30 !


மாறனின் பட்டுபோன்ற கைகளை மெல்ல எடுத்து துளசியின் வயிற்றில் வைத்து, "மாறா, நீ அப்பாவாகப்போகிறாய்", என்றாள் துளசி. மாறன் தடுமாறினான். "என்ன துளசி?", என்று துளசியை தன்னைவிட்டு தள்ளி நகர்த்தி கேட்டான் மாறன். "மாறா நீ அப்பா ஆகப்போகிறாய்.", என்று துளசி கண்ணோரத்தில் ஆனந்தக்கண்ணீர் வடிந்தபடி மீண்டும் கூறினாள்.


மாறனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. "நிஜமாகவே ?, எப்பதெரியும் எப்படி உறுதிசெஞ்ச?, ஏன் இவ்ளோ தாமதிச்ச என்கிட்டே சொல்ல?", என்று தன் கண்ணிலும் நீர் வடிவதை உணராமல் அடுக்அடுக்கான கேள்விகளை வீசினான் மாறன். இருவரும் மாறிமாறி கண்ணீரைத் துடைத்துவிட்டனர்.

ஆனந்தத்தில் இருவருக்கும் வார்த்தைகளே வரவில்லை. நின்ற மாறன், மண்டியிட்டு துளசியின் வயிற்றின் அருகில் முகம் வைத்து, "என் சின்ன துளசியே என்னை அப்பான்னு கூப்பிட நீ வரப்போகிறாயா?", என்று அனந்தகண்ணீரோடு தன் சிரிப்பை கலந்து கருவில் வளரும் குழந்தையிடம் பேசினான் மாறன். இரு கைகளுக்குள் மாறனின் கன்னத்தை வைத்து, "சின்ன துளசி இல்லை, சின்ன மாறன்! இப்போதான் நாற்பது நாட்கள் ஆகின. நானே மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்துவிட்டேன். " என்றாள் துளசி.


துளசி பேசப்பேச கருவில் இருக்கும் தன் குழந்தையும் சேர்ந்து மாறனிடம் பேசுவதுபோல் இருந்தது மாறனுக்கு. மலைகளில் உறங்கும் பறவைகள் அலறியடித்து பறக்கும்படி கத்தினான் மாறன், "நான் அப்பாவாக போகிறேன்" என்று. பெரிய ஆர்ப்பாட்டமே செய்து முடித்தான் மாறன். பொதுவாக மாறன் அமைதியாகவே இருந்து துளசி பார்த்துள்ளாள். ஆனால் இவ்வளவு கத்தியது, அதுவும் சந்தோஷத்தில் கத்தியது துளசிக்கு ஆர்ச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.


"மாறா... மாறா..., இங்கே வா, உன் பிள்ளை உன்னை அப்பான்னு கூப்பிடுது", என்றாள் துளசி. மாறன் காதில் துளசி உன் பிள்ளை என்றதும், தனக்கு பிள்ளைத்தரும் வாய்ப்பே இல்லை என்று மருத்துவர் சொன்னது நியாபகம் வந்தது. துளசியிடம் இந்த விசயத்தை எப்படி சொல்வது என்று அறியாது மெல்ல மெல்ல அமைதியானான். ஒரு வேலை தன் உடலில் எதாவது அதிசயம் நடந்திருக்குமோ என்றும் யோசிக்க தொடங்கினான். சில நாட்கள் முன் துளசிக்கு வந்த குறுஞ்செய்தி கூட மாறன் கண்முன் வந்து சென்றது. "ஒரு வேலை குறுஞ்செய்தி அனுப்பியது பெண்ணாக இல்லாமல் ஆணாக இருந்தால் ? என்றெல்லாம் மாறனுக்கு தோணத்தொடங்கியது.


மாறன் அருகில் துளசி சென்று மாறனின் கைகளை மீண்டும் துளசியின் வயிற்றில் வைத்து, "மாறா, இது உன் குழந்தை", என்று ஆணியால் அறைந்தவாறு பட்டென்று கூறினாள். மாறனின் புத்தி தவறான பாதைக்கு செல்லஇருந்ததை மாறனின் முகபாவனை கொண்டே உணர்ந்த துளசி, மாறனை சரியாக யோசிக்கவைக்கதான் இந்த வார்த்தைகளை வீசினாள். துளசியின் கண்களில் மாறன் பார்த்த தீ மாறனின் சந்தேகத்தை சுட்டெரித்தது. மாறன் துளசியை அணைத்துக்கொண்டான். "பனி விழுகிறது, இந்த சமயத்தில் இப்படி நீ நிற்கக்கூடாது.", என்று கூறினான். துளசியை எப்பொழுதும் ஒரு குழந்தைபோல் தான் மாறன் பார்த்துக்கொள்வான். ஆனால் முதல்முறையாக குழந்தையை சுமக்கும் தாயாக மாறன் பார்ப்பதைக்கண்டு வியந்து நின்றாள் துளசி. "துளசி, துளசி", என்று இரு முறை அழைத்தான் மாறன். பதில் ஏதும் இல்லை. மாறன், துளசியை கையிலே ஏந்தி வண்டியை நோக்கி நடக்க தொடங்கினான். இதற்குமுன் தூக்குகையில் உணர்ந்த முரட்டுத்தனம் இன்று மென்மையாக இருந்தது துளசிக்கு.


வந்தபாதையிலேயே மீண்டும் வண்டி திரும்பியதை பார்த்து துளசி, "மாறா, நம்ம ஏன் வீட்டுக்கு போறோம்?", என்று சற்று கோபமாகவே கேட்டாள்.

"துளசி, இதுமாதிரி நேரத்தில இப்படி ரொம்ப தூரம் போகக்கூடாதுன்னு அம்மா சொல்லுவாங்க. நம்ம வீட்டுக்கு போறோம் இப்போ.", என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் பேசினான் மாறன். மறுத்துப்பேசாமல் துளசியும் தலையை மட்டும் அசைத்தாள். மீண்டும் மாறனுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். துளசி, இறங்குவதற்குள் மாறன் இறங்கி துளசியின் கதவை திறந்துவிட்டான். எதோ பத்துமாதபிள்ளையை துளசி சுமப்பதுபோல், மெல்ல துளசியின் கைகளைப்பிடித்து இறக்கினான். துளசிக்கு சிரிப்பு பொங்கியது. "மாறா, எனக்கே இறங்கமுடியும். நான் நல்லாத்தான் இருக்கிறேன்.", என்று சத்தமாக சிரித்துக்கொண்டே கீழே இறங்கினாள்.


வீட்டுக்கதவினை மாறன் திறந்ததும் உள்ளே முதலில் சென்றாள் துளசி. பல்லியொன்று திடிரென்று ஓட, அருகில் இருந்த செருப்புகள் வைக்கும் பலகையை படக்கென்று தவறுதலாக தட்டினான் மாறன். பலகைமேல் இருந்த துளசியின் மாற்று செருப்பில் இருந்து கீழே விழுந்தது, ஒரு சின்ன துணிப்பை.

மாறன் வியப்போடு என்னவென்று துணிப்பையை துறந்தான்.


-தொடரும்


ree




1 Comment


kani mozhi
kani mozhi
Jul 01, 2020

always ending n suspense..😍😍😚

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page