top of page

என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 10!

  • Writer: Sridhana
    Sridhana
  • Jul 16, 2020
  • 5 min read

வாழ்க்கை ஒரு தேடல் - பாகம் - 10 !

இந்தச்சுற்றின் இறுதி பாகம் !

எழுதியது - திருமதி ராகவிஷாலினி ராம்மோகன்


இந்த வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது .

நமது ஆசைகளும் அதற்கான தேடல்களுமே நம் சந்தோஷத்தை நிர்ணயிக்கின்றன..

அந்த தேடலின் பயணத்தில் நாம் எண்ணற்ற நபர்களை சந்தித்து இருப்போம். சிலர் நம்மோடு சேர்ந்து பயணிக்கிறார்கள்.பலர் நம் நினைவுகளில் மட்டுமே பயணிக்கிறார்கள். சில நிகழ்வுகள் காலப்போக்கில் மறந்து போய்விடும். ஆனால் சில நிகழ்வுகளோ சிலந்தி வலையில் சிக்கிய பட்டாம் பூச்சி போல் நம் மனதில் பற்றி கொண்டே இருக்கும்..அதில் ஒன்று தான் நம் முதல் காதலும் முதல் நட்பும் -- இவ்வாறு யோசித்த படியே கனவுலகில் அமர்ந்திருந்தான் நம் கதாநாயகன் ஜனா !!!!

"ஹே டூட், ஷால் வி ஸ்டார்ட் " - என்று ஒரு குரல் அருகில் இருந்து.அதிர்ந்த படி கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு திரும்பினான் ஜனா.தன்னிலைக்கு வந்து "Sure டூட்" என்று கூறி, கம்பீரமாய் அலைபேசியை கையில் எடுத்து பேச தொடங்கினான்..

"அன்புள்ள பயணிகளே, உங்கள் அன்பான கவனத்திற்கு.!!!. நான் தான் உங்கள் கேப்டன் ஜனா. சிங்கப்பூரில் இருந்து சென்னை வரை செல்லும் இந்த விமானம் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். சுமூகமான பயணம் மேற்கொள்ளுங்கள்." என்று கூறி முடித்தான்.

ஆம் நம் கதாநாயகன் தன் aviation தேடலில் வெற்றி கண்டு பைலட் ஆகா உருவெடுத்தான். அடுத்த ஐந்து மணி நேரமும் கவனம் சிதறாமல் தன் கடமையை செய்து முடித்தான்.சென்னை விமான நிலையத்தில் இறங்கி வீடு செல்ல தயாராகி கார் ஒன்றை புக் செய்தான்.காரில் அமர்ந்து ஜன்னலை திறந்து சென்னை காற்றை சுவாசித்தான்..." அஹ்ஹ்ஹ இந்த வாசம் சென்னைக்கே உரியது.." என்று ரசித்து கொண்டிருந்தான் ..அவன் கைப்பேசி ஒலித்தது .."Wife Calling " என்று. எடுத்து "இதோ வந்து கொண்டிருக்கிறேன் மா " என்று சொல்லி துண்டித்தான் ..

அந்த மெல்லிய காற்று அவனை விடாமல் வருடி கொண்டு அவன் கடந்த கால நினைவுகளை அசை போட வைத்தது..

பார்த்ததும் காதல்,

பாக்காமலே காதல்,

ஒரு தலை காதல்,

ஒரே ஒருவரில் முடிந்த காதல்,

சொல்லி தோற்ற காதல்,

சொல்லாமல் ஜெயித்த காதல்,

தொலைபேசி காதல்,

இணைய தல காதல்,

இப்படி ஆயிரம் வகை காதல் இருந்தாலும், நம்மை தீண்டிய காதலுக்கு என்றும் ஒரு தனித்துவம் இருக்கும்.இதில் ஏதோ ஒரு வகை காதலை நாம் அனைவரும் வாழ்க்கையில் கடந்து தான் வந்து இருப்போம் ..நான் மட்டும் என்ன மிச்சமா என்ன -- என்று நினைத்தவாறு பயணித்து கொண்டிருந்தான் ஜனா..

கனவை கலைத்தது கைப்பேசி ஒலி .."சதீஷ் calling "..-"மச்சான் எங்க இருக்க.." என்று கேட்டான் நம் கதாநாயகனின் தோழன் சதீஷ்.. "இதோ வீட்டிற்கு தான் சென்று கொண்டிருக்கிறேன் " என்றான் ஜனா.

"சரி, இன்று இரவு உங்கள் இருவருக்கும் எங்கள் வீட்டில் தான் விருந்து. உங்களுக்காக என் மனைவி தடால் புடலாக சமைத்து கொண்டிருக்கிறாள். சீக்கிரம் கிளம்பி வாங்க" என்று சொல்லி துண்டித்தான்..

சதீஷ் - அன்றிலிருந்து இன்று வரை அதே தூய்மையான நட்பு .நட்பிற்காக எதையும் விட்டுக்கொடுக்க துணிந்தவன்..தன் கடந்த கால கனவில் மிதக்க நினைத்த ஜனா ,திசை மாறி தன் நண்பனின் காதலை பற்றிய நிகழ்வுகளை நினைவுகூர்ந்தான்..

தன் காதல் இடிந்து போனதை எண்ணி ஜனா அழுது கொண்டிருந்த அந்த இரவு, செல்வி யாருடனோ பேசிக்கொண்டிருந்ததை கவனித்த ஜனா மறுநாள் செல்வியிடம் கேட்டான். இரவு யாருடன் பேசி கொண்டிருந்தாய் என்று..அதிர்ச்சியில் திக்கு முக்காடிய செல்வி என் கல்லூரி தோழர்களிடம் பேசி கொண்டிருந்தேன் என்று சமாளித்தாள்.

அப்போது..திடிரென்று யாழினி யின் அழைப்பு வந்தது. ஜனா உடனே கிளம்பி வா என்றாள் பதற்றத்துடன் ..அவசரம் புரிந்து உடனே கிளம்பி சென்றான் ஜனா. பேருந்து நிலையத்தில் யாழ் நின்று கொண்டிருந்தாள் ....

ஜனா அருகில் சென்றான்..குழப்பத்தோடு அவளை பார்த்தான்.அழுது கொண்டே ஆரம்பித்தாள் யாழ்.. "என் தங்கை மதி யை பற்றி உன்னிடம் சொல்லி இருக்கிறேன் அல்லவா .." என்றாள்.."ஆம் அவளுக்கு என்ன ஆச்சு.." என்று பதற்றத்தோடு கேட்டான் ஜனா..இன்று அவளது அறையை சுத்தம் செய்கையில் ஒரு புகைப்படம் ஒன்றை கண்டேன்...அது அது ...நம் சதீஷ் யின் புகைபடம் .."

திகைத்து நின்றான் ஜனா.."மதி யிடம் விசாரித்தேன். ..சிறு வயது முதல் அவனை பார்த்து பழகியதால் அவளை அறியாமல் அவன் மேல் காதல் வசப்பட்டதாகவும் அவனை மிகவும் நேசிப்பதாகவும் தெரிவித்தாள்..இதை கேட்டதும் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ..சதீஷ் யிடம் நான் இதை எப்படி சொல்வேன்..என் தங்கை மிகவும் நல்லவள். அவளுக்கு எந்த ஏமாற்றத்தையும் என்னால் தர முடியாது. அதே சமயம் சதீஷ் என் ஆத்மார்த்த நண்பன்..என்னிடம் பழகியதை போல் தான் அவளிடமும் பழகினான்" என்று கூறி அழுதாள் யாழ்....

தன் தங்கை செல்வியின் ஆத்மார்த்த காதலை பற்றி சிறிதும் அறியாத ஜனா, யாழினி யை சமாதானம் செய்து , அவள் தங்கை காதலுக்கு உதவுவதாக வாக்கு குடுத்தான்.!!!!

"கிகி கி கி " என்று காரின் ஹார்ன் அடித்தது.கனவும் கலைந்தது. உங்கள் வீடு வந்து விட்டது சார் என்றார் வாகன ஓட்டி.."

பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கினான் ..

கதவை தட்டினான்.. கதவை திறந்தாள் ஜனாவின் மனைவி..

அன்று மருத்துவ மனை துவக்க விழாவில் சதீஷ் யின் பேச்சு தான் ஜனாவின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியது.

மருத்துவமனை துவக்க விழா முடிந்த அன்று இரவு, துக்கம் தாளாமல் பிதற்றிக்கொண்டிருந்தான் ஜனா. நட்ப்பையும் காதலையும் கூட பிரித்து பார்க்க தெரியாதவன் நான் ..என்று தன்னையே திட்டி கொண்டான் ..துக்கம் தாளாமல் யாழினி யின் கைப்பேசிக்கு அழைத்தான் ...

"ஹாய் என்று உற்சாகத்துடன் எடுத்தாள் ,யாழ் "

"இன்று சொல்லா விட்டால் இந்த உண்மை என்னுடனே புதைந்து விடும்” என்று ஆரம்பித்தான் ..”உன்னை பார்த்த முதல் கணம் முதல் உன்மேல் காதல் கொண்டு மிதக்கிறேன் யாழ்..ஆனால் இன்று தான் தெரிந்தது நீ உன் மாமா பையனை விரும்புவது..என்னை மன்னித்து விடு..உன் வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன்..நீ சந்தோஷமாய் இருந்தால் அதுவே எனக்கு போதும்"..என்றான்

பத்து வினாடி அமைதிக்கு பின்……

"ஹா ஹா ஹா ஹா " என்று ஓயாமல் சிரிக்க தொடங்கினாள் யாழ்..

"இந்த சதீஷ் பலே கில்லாடி தான் ..இல்லாத மாமனை வைத்து உன்னை பேச வெச்சிட்டானே" என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்.

"இது கனவா இல்லை நினைவா என்று தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டான் ஜனா.."

சிறு அமைதிக்கு பின்.."நானும் அப்படித்தான்" என்றாள் யாழ்..

" அப்படித்தான் என்றால் என்ன” என்று ஆவேசத்துடன் கேட்டான் ஜனா..

"கல்லாரியின் முதல் நாள் நீ என்னை பார்ப்பதற்கு முன்பே நான் உன்னை பார்த்துவிட்டேன்..உன்னிடம் விழுந்துவிட்டேன் " என்றாள்...

நம் காதநாயகனை சுற்றி தேவதைகள் உலாவ ஆரம்பித்தனர் ..."நம் தன நம் தன நம் தன நம் தன " என்ற கோரஸோடு ..

காதல் கிளிகள் இரண்டும் காதலை பரிமாறிக்கொண்டனர் ,,,அன்று தொடங்கிய காதல் இன்று வரை தொடர்கிறது திருமணத்திற்கு பின்னும்..

"வெல்கம் ஹோம்" என்று மெல்லிய குரலில் யாழிசைதாள், ஜனா வின் மனைவி யாழ் ..இருவரும் அன்பையும் நீண்ட நாள் பிரிந்து இருந்த காதலையும் பரிமாறி கொண்டனர்.

“இன்று இரவு சதீஷ் தன் வீட்டிற்கு நம்மை அழைத்துள்ளான்” என்று கூறினான் ஜனா..ம்ம்ம் கண்டிப்பா ...அவர்களை பார்க்க ஆவலாய் உள்ளேன் என்றாள் யாழ்..

இருவரும் கிளம்பி காரில் சென்றனர்.வழியில் பேசி கொண்டே சென்றனர். உன் தங்கை மதி இப்போது ஹாப்பி தானே என்று கேட்டான் ஜனா .. ம்ம்ம்..வெரி ஹாப்பி என்றாள் யாழ்..

சதீஷ் வீடு வந்தது..இருவரும் கதவை தட்டினார்..

கதவை திறந்தாள் தங்கை!!!!

உபசரிப்புகளுடன் தேநீர் உண்டனர்.சதீஷின் மனைவி இனிப்புகளை வழங்கினாள்.

பேசி கொண்டிருக்கையில் யாழினி யின் கைபேசி ஒலித்தது .பேசி விட்டு வருகிறேன் என்று ஒதுங்கினாள் யாழ்..

பேசி முடித்துவிட்டு தன் தங்கை மதியை பற்றிய கடந்த காலத்தை நினைவுகூர்ந்தாள் யாழ்.

அன்று ஒரு நாள் தன் தங்கையின் காதலை பற்றி சதீஷிடம் தெரிவிக்க அவனை பூங்கா ஒன்றிற்கு அழைத்திருந்தாள் யாழ் .

இருவரும் பூங்காவில் சந்தித்தனர்.

யாழ் ஆரம்பிப்பதற்கு முன்பு சதீஷ் முந்தினான் .."நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர வேண்டும் யாழ்" என்று சொல்லி இழுத்தான்..."நானும் ஜனா வின் சகோதரி செல்வியும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறோம்..நண்பினின் தங்கை யை வேறு கோணத்தில் பார்த்தது என் தவறு தான் ..ஆனால் நான் உணர்ந்த ஈர்ப்பை தான் செல்வியும் என்னிடம் உணர்ந்திருக்கிறாள். இதை ஜனா விடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை..நீ தான் உதவ வேண்டும் "என்றான் ..

பேச வந்த வார்த்தைகள் அனைத்தும் தொண்டையில் சிக்கி திண்டாடினாள் யாழ். இது என்ன சோதனை. ஒரு பக்கம் தன் தங்கை மறு பக்கம் தன் நண்பன். யாருக்கு துணை போவது என்று நினைத்து தடுமாறினாள் யாழ். இதயத்திற்கும் மூளைக்குமான போராட்டம் அது. இறுதியில் மூளை வென்றது.தன நண்பனின் காதலுக்கு தூது போனாள் யாழ்.

தன் மனதை பக்குவப்படுத்திக்கொண்டு ,தன் தங்கை மதியிடம் சென்று பக்குவமாய் பேசி உண்மையை எடுத்து கூறினாள்.முதலில் ஏற்க மறுத்த மதி பின்பு உணர்ந்து நிதானம் திரும்பி தன் ஒரு தலை காதலை விட்டுக் கொடுத்தாள். காதல் கனவு நிறைவேறாத மதியின் லட்சிய கனவை நிறைவேற்ற யாழும் ஜனா வும் சேர்ந்து முடிவு செய்தனர். அவள் லட்சிய கனவான M.S படிக்க அனைத்து உதவிகளையும் செய்து அமெரிக்கா விற்கு படிக்கச் அனுப்பி வைத்தனர் யாழும் ஜனாவும். மதியின் இந்த ஒரு தலை காதல் ஜனாவிற்கும் யாழினிக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியமாய் புதைந்து விட்டது.

ஜனா, சதீஷ் யின் தந்தை என்று அனைவரின் சம்மதம் பெற்று இன்று சதீஷ் யின் வாழ்க்கைத் துணையாய் செல்வி உருவெடுக்க ஊன்றுகோலாய் விளங்கினாள் யாழ்..!!!!!!

"உன் தங்கை மதியிடம் இன்னுமா பேசுகிறாய் " என்று ஜனா கேட்டான்.

நினைவுகள் கலைந்து, இதோ வந்து விட்டேன் என்று சொல்லி அனைவரும் கூடி இருக்கும் உணவு மேடைக்கு திரும்பினாள் யாழ்..

"நான் செய்த ஜாமுன் எப்படி இருக்கு என்று சுவைத்து சொல்லுங்கள் அண்ணி " என்றாள் ஜனாவின் செல்லத் தங்கை , சதீஷின் காதல் மனைவி செல்வி..

"ம்ம்ம் அருமை " என்று கூறினாள் யாழ்.

பேசிகொண்டிருக்கையில் சதீஷின் தந்தை , ஜனா வின் அப்பா அம்மா என்று அனைவரும் ஒன்றிணங்க இனிப்புகளுடன் சதீஷ் வீட்டிற்கு வந்தடைந்தனர் .உள்ளே வந்ததும் " இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் " என்று ஒருசேர வாழ்த்தினர் ..ஆம் இன்று தான் ஜனா மற்றும் சதிஷ் இருவரின் திருமண நாளும் . இருவரின் திருமணமும் ஒரே நாள் ஒரே மேடையில் தான் நடந்தேறியது.

பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற்று , அனைவரும் உணவு மேஜைக்கு திரும்பினார்கள்..அந்த இரவை அழகாய் கழித்தனர் .!!!!!

நினைவுகள் தான் வாழ்க்கையின் பொக்கிஷம்.அது கசப்பான அனுபவமோ இனிப்பான அனுபவமோ அந்த நினைவுகள் தான் நம்மை பக்குவபடுத்தும்.

ஆயிரம் இனிப்புகள் இன்று வந்தாலும் , ஆறு வயதில் நாம் சுவைத்த தேன் மிட்டாய்க்கு ஈடு இணை இல்லை அல்லவா .அது போல தான் காதல். என்று நினைத்தாலும் அதே சுவை அதே மணம். நம் மனதில் ஓடையாய் தேங்கி இருக்கும்.

ஜனா , சதீஷ் தம்பதியினர் திருமணத்திற்கு பிறகும் ,தங்கள் காதலின் சுவையும் மணமும் மாறாமல் அன்னோன்னியமாய் வாழ்ந்தனர்.

“கனவுகளின் தேடல் தான் நிஜம்

இளமையின் தேடல் தான் காதலும் நட்பும்

முதுமையின் தேடல் தான் அன்பும் ஆதரவும்

தனிமையின் தேடல் தான் அமைதி “

இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் !!!!!!

எந்த ஒரு முடிவும் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கம் தானே.

குழந்தை பருவத்தின் முடிவு தான் பள்ளி பருவத்தின் தொடக்கம்.

பள்ளி பருவத்தின் முடிவு தான் இளமை பருவத்தின் தொடக்கம் .

இரவின் முடிவு தான் பகல்.

காதலின் முடிவு தான் திருமணம்

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.

வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கம் தான். அதை நமக்கு சாதகமாய் மாற்றி அதில் இன்பம் கொள்வது தான் இனிமையான வாழ்க்கைக்கு வழிகாட்டி.

இன்று இந்த கதை முடிந்தாலும் ..இவர்களின் காதலும் காதலை தாண்டிய நட்பும் என்றும் நம் நினைவுகளில் தொடரும் !!!!

இவர்களின் உண்மையான காதல் ,உயிர் உள்ளவரை வாழும்.

ஆழமான நட்பு ஆயுள் தாண்டி வாழும், நம் நினைவுகளில்!!!!!


திருமதி ராகவிஷாலினி ராம்மோகன் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து,

உங்கள் கண்களுக்கும் மனதிற்கும்

இதமான எழுத்துக்களோடு

மீண்டும் விரைவில்

புது முயற்சியோடு உருவெடுப்போம் !


ree

ree

5 Comments


kani mozhi
kani mozhi
Jul 17, 2020

Wow.. Superb .. Climax ipadi thanu yugika mudinchalum epadi mudikiranganu wait panuvomla athu mathiri than.. But suspense till end vara continue paninanga writers ellarum 👏👏. Climax superb.. Ungaloda varigal arumai.. Keep going..

Like

Vidhya
Jul 17, 2020

Amazing ragavishalini! Nalla yathartha varthaigal , arthamulla varigal.. proud of u dear! Good going..

Like

Shobana
Jul 17, 2020

Excellent madhu.... this was really a very interesting story and was so curious to know what happened next....unakulla oru writer um irunthirkaru nu enaku theriyama pochey.... Congragulations and keep continuing it...

Like

Priya ramesh
Jul 16, 2020

Beautifully explained abt friendship. Congrats to all the writers...... keep continuing.

Like

Geetha pj
Jul 16, 2020

முடிவில் இருக்கையின் நுனியில் அனைவரையும் அமர வைத்த எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page