top of page

என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 1

  • Writer: Sridhana
    Sridhana
  • Jul 5, 2020
  • 3 min read

Updated: Jul 15, 2020

இளநிலை கணினி - முதலாம் ஆண்டு - பாகம் - 1


முதல் எழுத்தாளர்!


எழுதியவர் - திரு. செ.அ.ரா


அரும்பு மீசையின் கனவு கல்லூரி வாழ்க்கை. தனது பள்ளிப்பருவத்தை முடித்துவிட்டு கல்லூரிவாசல் நோக்கி செல்வது, அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரு சொப்பனம். அந்த சொப்பனம் நிறைவேறும் காலம் கனிந்தது ஜனாவிற்கு.

"ஜனா" ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். ஜனாவின் தந்தை "செல்வம்" ஓர் தனியார் அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியராக பதினைந்து வருடமாக பணிபுரிந்து வருகிறார். ஜனாவின் தாய் "ஊர்வசி" ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த ஓர் மேதை. தங்கை "செல்வி", எதை பற்றியும் கவலைக்கொள்ளாத ஓர் செல்லம். ஜனாவை விட ஒரு வயது குறைவு, ஆனால் அழகிலும் அறிவிலும் சற்றும் குறைவில்லாதவள். செல்வம், செல்வி மற்றும் ஜனாவின் தேவை அறிந்து அவர்களுக்கு இன்முகத்தோடு பணிபுரிவதே ஊர்வசியின் ஒரே பணி.

பள்ளிப்பருவத்தை முடித்த ஜனாவிற்கு வானூர்திப் பணியாளராகவேண்டும் என்ற ஆசையை துறந்து இளநிலை கணினி பிரிவில் முதலாம் ஆண்டு சேர்ந்தான். இது அவன் குடும்பச்சுழ்நிலை கருதி எடுத்த தன்னிச்சையான முடிவு. அன்று ஜூன் 5 ஆம் தேதி, கல்லூரியின் முதல் நாள். புது கனவுகளுடன் தனது கல்லூரி வாழ்க்கையை ஆரம்பித்தான். வகுப்பறை முழுதும் நிறைந்திருந்த புதுமுகங்கள், ஓர் எதிர்பார்ப்புடன் அருகில் இருப்பவர்களிடம் தன்னைப்பற்றியும் அவர்களைப்பற்றியும் கேட்டறிந்து கொண்டு இருந்தார்கள்.

அது ஓர் இணைக்கல்வி கல்லூரி என்பதால் மாணவிகளும் ஒருபுறம் நிறைந்து இருந்தார்கள். அவர்களைக்கண்ட ஜனா, வகுப்பின்வாயினில் இருந்து வெறும் இரண்டு மீட்டர் தூரமுள்ள மேசையை அடைய அவன்பட்ட சிரமம், புது அனுபவம். ஒருவழியாக தனது இருக்கையை அடைந்து பெருமூச்சிவிட்டான். அருகிலிருந்து ஓர் குரல் "ஹே டூட், ஆண்கள் மேல்நிலை பள்ளியா?" என்றான் மற்றும் தன் பெயர் "சதிஷ்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். கண்டுபிடித்துவிட்டானே என்ற வியப்புடன், ஒருவித கூச்சத்துடன் "ஆம்" என்றான் புன்முறுவலுடன், தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டான்.

நாட்கள் சென்றன, பலரின் நட்புக்கிடைத்தாலும் சதிஷ் மட்டுமே அவனது நெருங்கிய நண்பனாக அவன் மனம் ஏற்றது. தனது குடும்பச் சூழ்நிலை மற்றும் தன் ஆசை அனைத்தையும் அறிந்தவன் அவன் ஒருவனாகவே இருந்தான். சதிஷ் ஓர் செழிப்பான தந்தையின் மகன். நினைப்பதை கேட்கும்முன்னே அவன் கண்முன் கொண்டுவரும் செல்வாக்கு படைத்தவர் அவன் தந்தை. ஆனால் இவையெதையும் அறியாதவனாய் இருந்தான் ஜனா. சதீஷும் அதையே விரும்பினான், ஏனென்றால் அவன் தாயில்லா பிள்ளை, அன்பிற்கு ஏங்குபவன் மற்றும் தன்னிடம் யாரேனும் உண்மையாக அவனையும், அவன்குணத்தையும் அவ்வண்ணமே ஏற்கும் ஓர் ஒப்பற்ற பண்பை மதிப்பவன். அவன் தந்தையின் செல்வாக்கு அதற்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்று நினைத்தான். மாதங்கள் உருண்டோடியது, ஜனாவிற்கும் சதிஷிற்கும் இடையே நட்பு பலமானது. ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் தான் உண்ணும் உணவு முதல் படிக்கும் பாடம் வரை பகிர்ந்துக் கொண்டனர்.

ஒரு நாள் ஜனாவின் தங்கையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தன் வீட்டிற்கு வருமாறு அழைத்தான். சதீஷும் வருவதாக வாக்குக்கொடுத்தான். அன்று டிசம்பர் 22, ஜனாவின் தங்கை செல்வியின் பிறந்தநாள். தனது வீட்டில் உள்ள சிறிய அறையை அலங்காரம் செய்து தனது தாய் தந்தையர் முன், மாலை 7 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். இந்த கொண்டாட்டம் செல்வி பிறந்தநாளுக்கு மட்டும்தான். ஜனா தனது பிறந்தநாளை அவ்வாறு கொண்டாடுவதில்லை, மற்றவர்களை அனுமதிப்பதும் இல்லை. நேரம்நெருங்கி கொண்டிருக்க, சதிஷ் வருகையை அவன் மனம் எதிர்பார்த்தது. சதிஷ் வருவதாக ஊர்வசிடம் சொல்லி சிறந்த முறையில் இரவு உணவு இருக்கும்படி செய்தான்.

நேரம் நெருங்கியது, ஊர்வசி ஜனாவை பார்த்து அவன் தந்தை மற்றும் செல்வி காத்துக்கொண்டிருப்பதாக கூறினாள். உடனே தன் அலைபேசியை எடுத்து சதிஷின் அலைபேசிக்கு அழைத்தான், அழைப்பு ஏற்கப்படவில்லை. அவன் தந்தை செல்வம் தனைநோக்கி வருவதை உணர்ந்து "வாருங்கள் அப்பா ஆரம்பிக்கலாம்" என்றான். ஜனாவின் கண்களைப் பார்த்து "சரி வா" என்று அவனை உணர்ந்தவாறு அழைத்து சென்றார். அலங்கரிக்கப்பட்ட அறையில் அவன் தங்கை புத்தாடை அணிந்து பட்டத்து இளவரசி போல் "கேக்" வெட்டுவதற்க்காக காத்துக் கொண்டிருந்தாள். "யாருடா வராங்க, வருவார்களா இல்லையா" என்று கேட்ட செல்விக்கு "வரும்போது வரட்டும், நீங்க ஆரம்பிங்க மேடம்" என்று கூறி சமாளித்தான். பின் வழக்கம் போல் தன் குடும்பத்தினர் மூவரின் முன் “கேக்”யை வெட்டக் கொண்டாடத்தை ஆரம்பித்தாள். அவ்வாறே நேரம் செல்ல அவர்கள் இரவு உணவும் ஆகிற்று. சதிஷ் வருவதாக எந்த ஒரு அறிகுறியும் இல்லை, அவனிடமிருந்து அழைப்பும் வரவில்லை. ஏமாற்றத்துடன் மனமின்றி உறங்கச் சென்றான் ஜனா.

இரவு மணி 11, அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான் ஜனா. செல்வி, தனக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். ஜனாவும் தன் பங்கிற்கு ஓர் கைக் கடிகாரம் பரிசளித்திருந்தான். அந்த கடிகாரத்தை நாளை பள்ளிக்குச் செல்லும்பொழுது கட்டிச் செல்வேன் என்று தனக்குள்ளே கூறிக்கொண்டாள். ஜனாவின் அலைபேசி ஒலிப்பதை உணர்ந்து அதை விரைந்து சென்று ஒலியின் வேகத்தை குறைத்தால் செல்வி. ஏனென்றால் அனைவரும் வேலை பார்த்த அலுப்பில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தனர். இந்நேர அழைப்பு செல்வியை சற்று எரிச்சலடையச் செய்தது. யார் என்று பார்க்கும்போது "My Friend" என்று பதியப்பட்டிருந்தது. சற்று கோவமாக அழைப்பை ஏற்ற செல்வி "ஹலோ" என்றாள். செல்வியின் ஹலோவை பொருட்படுத்தாமல் மறுமுனையில் சதிஷ் "சாரி மச்சான், வர முடியெல" என்றான். உடனே செல்வி "சரி மச்சி, இதை நாளை காலை ஜனாகிட்ட சொல்லு, இப்ப போனே வை" என்று அழைப்பை துண்டித்தாள்.

மறுநாள் ஜனா கல்லூரிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேலையில் செல்வி அழைப்பு வந்த விடயத்தை கூறினாள். "சரி, நான் பாத்துக்கொள்கிறேன்" என்று புறப்பட்டான் ஜனா. செல்வியும் பள்ளிக்கு புறப்பட்டாள். செல்வாவும் தன் அலுவலகத்திற்கு புறப்பட்டார். செல்வியின் பள்ளி தன் அலுவலகம் செல்லும் வழியில் என்பதால் மகளை தன்னுடனே "டிவிஎஸ் 50 " வண்டியில் அழைத்துச்செல்வார். ஊர்வசி மூவருக்கும் காலை உணவு பரிமாறிவிட்டு, மதிய உணவு கொடுக்க தவறமாட்டாள். மூவரையும் வழி அனுப்பிவிட்டு தொலைக்காட்சி தொடர் பார்க்க ஆரம்பித்துவிடுவார் ஊர்வசி.

கல்லூரிச் சென்ற ஜனாவின் கண்கள் சதிஷ்யை தேடியது. அவனை பார்த்ததும் கோவம் கொண்டு பேசாமல் அருகில் சென்று அமர்ந்தான் ஜனா. "டே மச்சி சாரி டா" என்றான் சதிஷ். அதற்கு எதுவும் பதில் கூறாமல் இருந்த ஜனா, சதிஷ்யை பார்க்க விருப்பமில்லாததுபோல் திரும்பி மறுமுனை பார்த்தான். அப்பொழுதான் யாழினி, தன் சக மாணவியிடம் பேசிச் சிரித்து கொண்டிருந்தது அவன் கண்முன்பட்டது. அதைப்பார்த்து ஏனோ அவன் மனம் இலகுவானது போல் ஓர் உணர்வு, சதிஷின்பால் கொண்ட கோபம் `மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். வகுப்பு விரிவுரையாளர் வருவதை உணராமல் தன்னை மறந்து அமர்ந்திருந்தான். அருகில் இருந்த சதிஷ், ஜனா விரிவுரையாளர் வருவதை கவனிக்காமல் இருப்பதை உணர்ந்து அவன் கையைப் பிடித்து இழுத்தான். சுதாரித்து கொண்டு ஜனா வேகவேகமாக எழுந்து நின்று விரிவுரையாளருக்கு தன் மரியாதையை செலுத்தினான்.

"இந்த ஆறு மாதகாலமாக நாம் கல்லூரிக்கு வருகிறோம், இப்படி ஒரு உணர்வை நான் உணர்ந்ததில்லை" என்று தனக்குள் யூகித்து கொண்டிருந்தான் ஜனா. அவன் பார்வை பல முறை யாழினியின்பால் அவனை அறியாமல் சென்றது. ஜனாவின் மௌனம் புரியாத சதிஷ், இவனை எவ்வாறு சமாதானம் செய்வது என புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான். இவ்வாறாக அந்நாள் புதிராய் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. மாலை கல்லூரி முடியும் தருவாயில் யாழினி வீட்டிற்கு கிளம்பினாள். இதையும் உற்று கவனித்துக் கொண்டிருந்த ஜனாவின் மனம் திடிரென்று படபடவென துடிக்க, அவன் அருகில் இருந்த சதிஷ் "ஆர் யு ஓகே மச்சி?" என்றுக்கேட்க “ஓகே பை மச்சி " என்று கிளம்பினான் ஜனா. ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற சதிஷ் "ஒரு வழியாக நம்மிடம் பேசிவிட்டான், நாளை எல்லாம் சரியாகிவிடும்" என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.


திரு. செ.அ.ரா அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து எழுத்தாளர் வித்யா அவர்களின் பாகம் - 2 தொடரும் !


ree


5 Comments


Nila
Jul 10, 2020

Well written with the introduction, Rare combination of Father name Selvam and Daughter name Selvi.

Name selection is quite interesting! Friendship waves between boys are very genuine until the love touches !.... Hmm.. Good start !


Like

sriram.r83
sriram.r83
Jul 09, 2020

முடிவில் தொடர்ச்சி,

புது முயர்ச்சி !!

பத்துப்பாட்டு - சங்கத்தமிழ்

பத்துக்கதை -செல்லத்தமிழ்

அருமை.!!


Like

kani mozhi
kani mozhi
Jul 06, 2020

Nalla Aarambam.. Kalloori Natpu👌👍

Like

Harshita
Jul 06, 2020

Could imagine the scenes .. great words used!

Like

Sridhana
Sridhana
Jul 05, 2020

Beautiful start !

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page