top of page

என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 2

  • Writer: Sridhana
    Sridhana
  • Jul 6, 2020
  • 2 min read

Updated: Jul 15, 2020

யாழிசையில் லயித்த ஜனா - பாகம் - 2!


இரண்டாம் எழுத்தாளர்!

எழுதியவர் - திருமதி. வித்யா


சதிஷ் கிளம்பினானா இல்லையா என்றுகூட அறியாதவனாய் சஞ்சலம் அடைந்த மனதுடன் கால் போன போக்கிலே நடந்து சென்றான் ஜனா. கல்லூரிக்கு வந்து சேர்ந்தது முதல் அரையாண்டு முடிந்த இந்நாள் வரை தான் பார்த்தவர்கள், பேசியவர்கள் என்று சிலரை மட்டுமே அவனால் நினைவுக்கூர முடிந்தது. ஆனால் நன்கு பழகியவர்கள் என்று சதிஷைத் தவிர ஒருவரைக்கூட அவனால் யோசிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு சதிஷ் தன்னை ஆட்கொண்டிருக்கிறான் என்று உணர்ந்தான் ஜனா.


ஒரு பக்கம் வியப்பாகவும் மறு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது அவனுக்கு. “இவ்வளவு நல்லவன் நேற்று பிறந்த நாள் விழாவிற்கு வராமல் போனது ஏன் ?“ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டான். “சரி விடு ஏதாவது முக்கியமான வேலையாய் இருந்திருக்கும்” என்று தன்னைத்தானே ஆறுதலும் படுத்திக்கொண்டான்.


மறுபடியும் அவன் இன்று வகுப்பில் பார்த்து அசந்து போன அந்த பெண்ணின் திருமுகம் நினைவுக்கு வந்தது. கல்லூரி முதல் நாள் அன்று வகுப்பில் ஒவ்வொருவராக எழுந்து தன்னைப்பற்றி அறிமுகம் செய்துக்கொண்டதும் ,அவள் பெயர் யாழினி என்றும் நினைவிற்கு வந்தது.

இவ்வாறெல்லாம் எண்ணியவாரே வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் கல்லூரிக்கு சற்று அருகில் இருந்த கஃபே ஒன்றிற்கு முதல் முறையாக சென்றான்.


சிறிது நேரம் யாழினியின் நினைவாகவே இருந்தான். சரி ஏதாவது ஆர்டர் செய்யலாம் என்று மெனு கார்டை தேடினான். தன்னுடைய மேஜையில் இல்லாததால் எதிர் மேஜையில் எடுக்கலாம் என்று பார்த்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. என்னவாக இருக்கும்?

ஆம் ...எதிர் மேஜையில் அமர்ந்து இருந்தது யாழினியேதான்.. நம் ஜனாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடித்தான் போனான் நமது ஜனா. ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு யாருக்காக காத்திருக்கிறாளோ என்று நினைத்தவாறு ஒரு டம்ளர் தண்ணீரை பருகினான். கஃபேவின் இசைத்தட்டு இவ்வாறு ஒலித்தது “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்”. எப்பொழுதும் செல்வி முனுமுனுக்கும் பாடல்.அப்பொழுதெல்லாம் காதில் விழுந்ததில்லை. இன்று என்னவோ செய்தது அவனை. யாழ் என்ற சொல் தானோ என்னவோ. செல்லமாய் கடிந்து கொண்டான் தன் மனதை.


தனக்குள் எழுந்த மாறுதல்களை ஒருவாறு சமாளித்துக் கொண்டு மெனு கார்டை எடுத்து ஒரு பர்கரை தேர்வு செய்தான். பர்கர் என்றாளே முகம் சுளிப்பவனுக்கு இன்று எல்லாம் புதுமையாய் இருந்தது. மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

பேரர் என்று கூற எண்ணினான்.மறுமுனையில் எதிர் மேஜையில் அமர்ந்திருந்த யாழினி இப்பொழுது தனது மேஜையில். ஆஹா...இரண்டாவது லட்டூ என்றது மனம். ஹலோ....... என்றான் ஜனா. “யாழினி” என்று சிரித்தால் ,அவள் தனது துப்பட்டாவை சரி செய்து கொண்டே. மன்னிக்கவும் பெயர்..... என்று தலையை சொரிந்தான் ஜனா, அவள் பெயர் அறியாதவனைப் போல.

“சதிஷ் என்ற பெயரைத் தவிர தங்களுக்கு வேறெதுவும் தெரியாது தானே?!” என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள். சில்லரைகளை சிதறவிட்ட சினேகிதியாகிப்போனாள். ஜனா சொல்வதறியாது சிறு புன்னகையுடன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.


பின்பு , “சதிஷ் போன்ற ஒரு நண்பன் என் வாழ்நாள் பாக்கியம்” என்றான். “அவன் என்னுடன் இருந்த இத்தனை நாட்களும் எப்படி நகர்ந்ததென்றே தெரியாமல் இருந்துவிட்டேன்” என்றான் . “அதனால் தான் ஒரு அரையாண்டு காலம் முடிந்த பிறகும் கூட தன் வகுப்பினர்களின் பெயர் கூட தெரியாமல் இருந்திருக்கிறீர்கள்” என்றாள் அவள் ,சிறிது நக்கலாய்.

இருவரின் அறிமுகப் படலம் நடந்தேரியது.யாழினி கல்லூரிக்கு அருகில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் தனது குடும்பத்துடன் வசிப்பதாகக் கூறினாள். தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் , தாய் ஆசிரியர் என்றும் கூறினாள். ஜனா தன்னை பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூறினான். தனக்கு ஒரு தங்கை இருப்பதாக ஜனா கூறவே, யாழினியும் தனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் என்றும், அவள் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் படிப்பதாகவும் கூறினாள். “அடடே என் தங்கையும் அங்கேதான் படிக்கிறாள்” என்றான் ஜனா.


அறிமுகப் படலம் ஒருவாறு முடிந்த நிலையில், “என்ன சாப்பிடுகிறீர்கள்,ஆர்டர் செய்கிறேன்” என்றான் ஜனா. “இல்லை இருக்கட்டும்,என் நண்பனுக்காக காத்திருக்கிறேன்”என்றாள் யாழினி. முதல் முறையாக இன்று ஏமாற்றமடைந்தவாறு உணர்ந்தான் ஜனா. ஒருவாறு சமாளித்துக்கொண்டு சிறு புன்னகை புரிந்தான்.

என்ன பேசுவதென்று அறியாத இருவரும் தமது விருப்பமான நடிகர், நடிகைகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். இயல்பிலேயே மிகவும் அமைதியான ஜனா பேச ஆவல் இருந்தும் பேச முடியாமல் ஹும் கொட்டிக்கொண்டு இருந்தான்.


சுவாரசியம் மங்கிக்கொண்டிருந்த சம்பாஷனையில் சற்றே உயிர் வந்தது போல் மறுபடியும் ஒரு ஹஹஹஹாய் வந்தது யாழினியிடமிருந்து. அந்த ஹாய் இம்முறை நமது ஜனாவிற்கு அல்ல. எதிரே வந்த யாழினியின் நண்பருக்கு. சற்றே திடுக்கிட்டவனாய் திரும்பிய ஜனாவிற்கு மற்றுமோர் அதிர்ச்சி. எதிரே ஒரு பெரும் புன்னகையுடன் வந்தது சாட்சாத் இந்த கோப்பெருஞ்சோழனின் நண்பர் பிசிராந்தையார் தான் . ஆம் நமது சதிஷே தான்.....



திருமதி. வித்யா அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து

எழுத்தாளர் திருமதி. பௌசியா கான் அவர்களின் பாகம் - 3 தொடரும் !


ree

5 Comments


Nila
Jul 10, 2020

Quite Short but with usual twist..

Like

B T
B T
Jul 07, 2020

Good try ! Hope to see the next part aligned with previous parts and use all the characters of the story !

Like

Sridhana
Sridhana
Jul 07, 2020

விறுவிறுவென நகர்கிறது !

Like

ashokrajvg
ashokrajvg
Jul 07, 2020

எதிர்பார்ப்பு தொடர்கிறது

Like

kani mozhi
kani mozhi
Jul 06, 2020

Nice.. Nalla continuation.. 👌👍👏👏

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page