என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 4
- Sridhana
- Jul 8, 2020
- 2 min read
Updated: Jul 15, 2020
தனிமையில் யாழுடன் ஜனா - பாகம் - 4 !
நான்காம் எழுத்தாளர்!
எழுதியவர் - திருமதி. அஞ்சனா
உறங்கிய சில நிமிடங்களில் அவன் அலைபேசி பீப் என அலறியது..குறுஞ்செய்தி அழைப்பு!
'குட் நைட் - யாழ்' என்ற செய்தி ஸ்மைலியுடன் முடிந்திருந்தது ! படித்து முடித்தவுடன் ஆரம்பமானது ஸ்மைலி அவனிடம்..சற்று முன் இதயத்தை வென்றிருந்த மூளை மூலைக்குத் தள்ளப்பட்டது ..விரல்கள் படபடத்தது..மனதும்...உடம்பு குளிரிற்று...'குட் நைட்..யாழ்'...மறுபடியும் படித்தான்..மறுபடியும்...கவிதை போல இருந்தது...குளிர் அதிகமாகியது..வெளியே மரம் காற்றில் வேகமாக ஆடியதால்..இவன் மனதைப் போல...மூளை குழப்பியது..பதில் தரலாமா? வேண்டாமா ?
தயக்கம் வென்றது...தூங்கினான்..
விடிந்ததும் வெளியே பார்த்தான்..லேசான சாரல்..அலைபேசி எடுத்தான்..குறுஞ்செய்தி 'குட் மார்னிங்..யாழ்'..
சிலிர்த்தான்.. சாரல் பட்டு..மரம் அழகாய் தெரிந்தது..மனமும்..ஆனால் பதில் அனுப்பவில்லை...வேண்டாத கற்பனைகளால் குழப்பங்களும் தயக்கங்களும்..சே !.என தன்னையே கடிந்து கொண்டான்..
கல்லூரிக்கு செல்ல ஆர்வம் அதிகமாகியது..
'உன் இதயம் சொல்வதை செய்..வாழ்வு அழகாகும்' .காலண்டரில் தேதி கிழிக்கும்போது படித்து கொண்டிருந்தான்..
'என்னடா காலண்டரையே பார்க்குற? பரிட்சை தேதி பார்க்குறியா ?' அப்பாவின் குரல்..
'காதல் எனும் தேர்வெழு..' இது டீவியில் வந்த குரல்...பாட்டை யாரோ யாருக்கோ டெடிகேட் செய்து கொண்டிருந்தார்கள்... ரசித்தான்..
'கிளம்பல?'.அம்மாவின் குரல்.கிளம்பினான்....
கல்லூரி அருகே சதீஷ் வருகைக்கு காத்திருந்த பொழுது அவளைப் பார்த்தான்.தற்செயல்தான் ..வாழ்வில் பல தற்செயல்கள் தற்செயலாய் நடப்பதில்லை..எப்போது என தெரியாது..மழையைப் போல..
யாழினி நெருங்கி வந்தாள்..தூரல் ஆரம்பித்தது..மனதிலும்...ரம்மியமான வானிலை..ஆனால் புயல் மையம் கொண்டுள்ளது..அவனுள் !!..
அழகான வானிலை.அழகானவள் உடன்..மழை அடித்தது..அவன் காட்டில்..
'சார் மெசேஜுக்கு ரிப்ளை பண்ண மாட்டீங்களோ?' நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்..
முழித்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்..
சதீஷா!?..லீவு இன்னிக்கு !! நாம இரண்டு பேரும்தான் இன்னைக்கு..'இரண்டு பேரும்தான்' இரண்டு வார்த்தைகள் மட்டும் மழையைவிட குளிர்வித்தது...
ஏன் வரல ? என்றான்
ஏதோ வேலையாம்..நாளைக்குதான் வருவான் !
தூரல் நீடித்தது..
ரெயின்போ எனக்கு ரொம்ப பிடிக்கும். என்றாள்
வானம் பார்த்தான்..எங்க? கேட்டான்!
அத சொல்லல..ஐஸ்கிரீம் வெரைட்டி.!!
மழையிலயா?? உடம்புக்கு ஒத்துக்குமா? கேட்டுக்கொண்டே சட்டைப்பையில் காசை எண்ணினான்..
மழையிலதான் ..ஜில்லுனு இருக்கும்..
ஆனா இப்போ வேண்டாம் ..டைம் இல்ல..
ம்ம் என்றான்..
எதுவுமே பேச மாட்டியா? சதிஷ் கிட்ட மட்டும்தான் பேசுவியா ?
ஈவ்னிங் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? அவளிடம் கேட்டான்...அவன் கேட்டதில் அவனுக்கே வியப்பு!
நிச்சயமா!! என்றாள்..
கல்லூரியை நெருங்கினார்கள்..
சரி ! ஏன் மெசேஜூக்கு ரிப்ளை இல்ல??
முழித்தான் ! நேற்றைய எண்ண ஓட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் வந்தன..
தூங்கிட்டேன்.! சமாளித்தான்.
வகுப்பறை அருகில் வந்துவிட்டார்கள் ..
சரி! இங்கயும் தூங்கிடாத.! சொல்லிவிட்டு சிரித்தாள்..
வகுப்புக்குள் சென்றார்கள்..அவரவர் இருக்கைக்கு சென்றார்கள்..
அமர்ந்தவுடன்தான் அவனுக்குத் தோன்றியது..சே! சதீஷ் இன்னைக்கு லீவு..வெறுமையை உணர்ந்தான்.!
எப்படியோ நேரத்தை கடத்தினான் வகுப்பில்..
வகுப்புகள் முடிந்தது!
ஒன்றாக கிளம்பினார்கள்..
என்ன சாப்பிடலாமா? என்றாள்.
போகலாம் ! என்றான் .
உற்சாகம் சற்று குறைந்திருந்தது..
வகுப்பறையில் சதீஷ் இல்லாததால் கூட அப்படி தோன்றியிருக்கலாம்.. மனநிலையும் வானிலையும் எப்போதும் ஒன்றாக இருக்குமா என்ன? மழை விட்டிருந்தது !
காபி ஷாப் உள்ளே போனார்கள்.!
ரெயின்போ மூன்று! சே! ரெண்டு என ஆர்டர் செய்தாள்..
சதீஷுக்கும் ரொம்ப பிடிக்கும் ! என்றாள்..
ம்ம்..என்றான்.வேறு பதில் சொல்ல தெரியவில்லை.!!
ஐஸ்கிரீமுடன் செல்பி எடுத்துக்கொண்டாள்..அவன வெறுப்பேத்த ! என்றாள் சிரித்துக்கொண்டே !!
சிரித்தான்..
யாழினி தன் தாய் பற்றியும் தங்கை பற்றியும் பேசி கொண்டிருந்தாள். இவ்வளவு சொல்லிவிட்டேனே உன்னை பற்றியும் உன் குடும்பம் பற்றியும் எதுவும் சொல்லமாட்டாயா என்று கேட்டாள்.
ஜனா நாங்கள் நால்வர் என்று சொல்ல தொடங்க.. சிரித்தாள் எனக்கு தெரியும் சதீஷ் சொல்லியிருக்கிறான் என்றாள்.
அடுத்த பத்து நிமிடம் பேச்சு சதீஷ் பற்றியே இருந்தது !!
தங்கள் பள்ளி பருவ கதைகள் மற்றும் அவர்கள் ஒன்றாக சென்ற படங்கள் அனைத்தையும் பேசி கொண்டிருந்தார்கள்.
ஜனாவின் சிந்தனையில் அதே பள்ளியில் படித்திருக்கலாமோ என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க நேரம் கடந்துவிட்டதை உணர்ந்தான். பிரியவும் மனமில்லை ஆயினும் இன்றும் வீட்டில் சமாளிக்க வேண்டுமே என்ற பயம் ஒரு பக்கம்.
சிரித்துகொண்டே யாழ் செல்லவேண்டுமா என்று கேட்க இரண்டாம் முறை தான் மனதில் இருப்பதை சொல்கிறாளே என்று ஆச்சர்யம்.
தன் மாத செலவிற்கு வைத்திருந்த பணத்தை ஒரே நாளில் செலவு செய்தான். ஒரு புறம் ஆனந்தம் மறு புறம் நேற்று இரவு தன் பெற்றோர்கள் பேசியது மனதில் ஒலித்தது, ஆனால் அதை விட யாழின் ஓசை அதிகமாக இருந்தது.
கிளம்பலாம் என்ற நிலையில் யாழ் திடிரென்று ஒரு கேள்வி எழுப்பினாள்..
அவன பத்தி உனக்கு எல்லாம் தெரியுமா ??
திடுக்கிட்டான்.! எதைப் பற்றி.இவள் சொல்கிறாள்??
அவன் என்ன என்ன சொன்னானோ அதுவரைக்கும் தெரியும்..சமாளித்தான்..
சிரித்தாள்..அந்த சிரிப்பில் அவனுக்குத் தெரியாதது அவளுக்குத் தெரியும் என்ற எண்ணம் இருந்தது..
அவன பத்தி ஒரு ரகசியம் இருக்கு ! சொல்றேன்.!! என்றாள்
ரகசியம் அவன் எதிர்பாராதது!!!!!
திருமதி. அஞ்சனா அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து
எழுத்தாளர் திருமதி. பிரியா ராஜ்குமார் அவர்களின் பாகம் - 5 தொடரும் !
PART 3

Very less content or may be one content explained a lot with more chill words..
Good end to the next writer...
அருமை.... அருமை...... வாழ்த்துக்கள்.....🤩
Nice to read
அழகான பதிவு
Superb.. விறு விறுப்பாக.. ஓரு super fast express la pona feel.. அருமை 👏👏👍