top of page

என் முடிவில் உன் தொடர்ச்சி - பாகம் - 6

  • Writer: Sridhana
    Sridhana
  • Jul 11, 2020
  • 5 min read

Updated: Jul 15, 2020

யாழினி மற்றும் ஜனாவின் ஒரு நாள் பயணம் - பாகம் – 6

ஆறாம் எழுத்தாளர்!

எழுதியவர் - திருமதி. என்.எஸ்.பி.


சதிஷ் தன்னிடம் கேட்ட கேள்வியில் , யாழினி என்ற பெயர் செவியில் விழுந்ததும், சிறு நிமிடங்கள் மட்டுமே தன்னுள் ஒழிந்திருந்த யாழினியின் நினைவலைகளை மீட்டெடுத்தான் ஜனா . சதிஷிடம் பதிலேதும் கூறாமல் இருந்த நிமிடம், பீப் என்ற சத்தம் கேட்டது... கேட்டது தான் மிச்சம்., உடனே எப்படியாவது அலைபேசியை துண்டித்துவிட்டு மீண்டும் யாழினியிடம் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தி வந்திருக்குமோ !!! என்ற எதிர்பார்ப்புடன், சதிஷிடம் பேசினான்.

"ஓகே டா மச்சி, உனக்கு நாளை முழுவதும் வேலை உள்ளது, சீக்கிரம் தூங்கச் செல்" என்றான், சதீஷும் ஏதோ புரிந்தது போல் புண் முறுவலுடன், “ ஓகே டா , சி யு தென்" என்றான்.

மிகுந்த ஆர்வத்துடன் தன் அலைபேசியை எடுத்தான்,

"சதிஷ் ஆன் லீவ் டுமாரோ " - யாழினி , என்பதை பார்த்ததும் ,

"ம்ம்ம். தெரியும் "என்று பதில் அளித்தான் ஜனா...

"ஓகே.சி யூ டுமாரோ அட் காலேஜ்" -யாழினி , என்ற குறுஞ்செய்தி மீண்டும்.

"வெயிட்டிங்" என்று மீண்டும் மீண்டும் அடித்து , நொடியில் அதை நீக்கினான், பின்," ம்ம்ம்" என்ற குறுஞ்செய்தி மட்டும். .

அங்கே யாழினியும், இனம் தெரியாத மகிழ்ச்சியில் இருந்தாள் . இதுவரை அவள் இருபாலர் படித்த பள்ளியில் தான் படித்திருக்கிறாள், ...

யாழினிக்கு , பெண்களும் ஆண்களும் என நிறைய நண்பர்கள் உண்டு... மிகவும் நேர்த்தியானவள், பயமறியாதவளும் கூட. இருந்தும்,அவளுக்கு ஜனாவிடம் மட்டும் ஏனோ புதுவித அனுபவம் தோன்றியது. உடனே அவள் அலைபேசியில், உள்ள ப்லேலிஸ்ட் எடுத்தால், அன்று அவள் செவிகள் விரும்பிய இசை "யாரோ இவன், யாரோ இவன், என் பூக்களின் வேரோ இவன் "

மறுநாள் காலை எழுந்த ஜனா , தாமரை இலை நீர் போலே, அவன் வீட்டில் இருந்தும், இல்லாதவனை போல், தனி ஒரு உலகில் இருந்தான், தேர்ந்தெடுத்து உடை அணிந்தான் . தன் காதலை வெகு விரைவில் , அவளிடம் வெளிப்படுத்தலாமோ என்ற எண்ணத்தில் தத்தளித்தான்.

கல்லூரிக்குச் சென்றவன், யாழினியின் வரவை எதிர்நோக்கினான்.அவள் வரும் முன், அவனது எண்ண அலைகள் அங்கே தாண்டவம் ஆடியது.

யாழினியும் என்னைப் போல் தான் நினைத்திருப்பாளோ?? , அவளும் இன்று தேடித் தேடி உடை அணிந்திருப்பாளோ, அவளுக்கு சிகப்பு நிற குர்த்தி மிகவும் அழகாக இருக்குமே !!! என்று நிணைத்துக்கொன்டே அவளைத் தேடி சென்றான் ஜனா.


எப்பொழுதும் போல் , தன் தோழிகளுடன் கேன்டீனில் அமர்ந்து, ஆரவாரமாய் சிரித்து, ஆங்காங்கே மேஜையில் அமர்ந்தும் அமராததுமாய் இருக்கும் சீனியர் ஜோடிகளுக்கு மதிப்பெண் போட்டு கொண்டு, அடுத்ததாக வரும், வகுப்பு மிகவும் போர் அடிக்கும் என்றெல்லாம், பேசிக் கொண்டிருந்தார்கள். மிகவும் சுமாரான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பொருட்கள் தான் என்றாலும், அந்த கேன்டீன் தான் அவர்களின், பிடித்தமான கஃபே என்றே சொல்லலாம், யாழினி மற்றும் அவள் தோழிகள் சென்று கௌண்ட்டரில் நின்றாலே போதும், முதல் கவனிப்பு அவர்களுக்கு தான், மரியாதையினால் இல்லை, அப்பப்பா , இந்த கும்பல் சீக்கிரம் இடத்தை காலி பண்ண வேண்டும் என்று தான்.

சற்று தள்ளி இருந்து ஜனா அவளை ரசித்தான், இன்று காதல் ,அந்த வாலிப பருவத்திற்கே உரிய ஈர்ப்புடன் அவனை சீண்டியது...அவள் அழகிய கூரிய கன்களும், விழிகள் மின்ன, அளவான புன்னகை மட்டுமே அவள் இதழ்களில் ஓரமாய் அன்று வழிந்து ,அவள் கன்னங்களை எட்டி தக தகவென மெருகேற்றியது... அதை கண்ட ஜனா, என்ன மிருதுவான கண்ணங்கள், ஒரு முறை அதை தொட்டு தான் பார்த்தால் தான் என்ன என்ற , எண்ணங்களுடன் தனையே அங்கு துளைத்த பொழுதில் "ஹாய் ஜனா", என்ற அவள் குரல் இடையுற்றதை கண்டு திடுக்கிட்டு தன் நிலை வந்தான்....

அன்று யாழினியின் உடை ஜனாவின் எண்ணத்தை பிரதிபலிப்பதை போல் , சிகப்பு கலர் காட்டன் குர்த்தி அணிந்து வந்திருந்தாள்,, அவளது முடியில் இருந்த பாங்ஸ், இன்னும் அவளுக்கு அழகை சேர்த்தது , சட்டென அங்கே வந்த யாழினியின் தோழி, "ஹே யாழ், நீ கேட்டமாதிரி, இன்று இரண்டு மணி நேரங்கள் வகுப்புகளை கட் பண்ண வாய்ப்புள்ளது .நான் சமாளித்துக் கொள்கிறேன் என்றாள் .

அங்கே நடப்பது ஏதும் புரியாதவன் போலே திகைத்தான் ஜனா...அதை கண்ட யாழ், அவன் குழப்பங்களை தகர்த்து, "இன்று நான் அண்ணா நூலகம் செல்ல வேண்டும், நீயும் என்னுடன் வா" என்றாள் . கேள்வி எதுவும் கேட்காமல் தலையை ஆட்டினான் ஜனா.

சட்டென சென்று, தனது scooty pep எடுத்து வந்தாள் யாழினி, ஜனா ஓட்ட, அவள் பின் இருக்கையில் அமர்ந்தாள். அவனது தோழ்களில் தன் இரண்டு கரங்களையும் வைத்து , நாகரிகமான இடைவெளியை கைப்பிடித்து அமர்ந்தாள் யாழ். ஆனால் , ஜனாவோ , ஆயிரம் நட்சத்திரங்கள் தன்னை தீண்டியதை போல் உத்வேகம் கொண்டான்.

மதியம், நூலகத்தில்.

செல்லும் வழியில், யாழ் தான் மேற்படிப்புக்காக தன்னை தயார் செய்வதாகவும், ஆதலால், இன்றைய வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்கள் ஆன data science மற்றும், cloud கம்ப்யூட்டிங், போன்றவற்றில் ஆர்வம் செலுத்துவதாக கூறினாள் .

மேலும் அவள் சில புத்தகங்கள் கல்லூரி நூலகத்தில் இல்லை என்பதால் இங்கு வந்ததை கூறினாள் . அவள் அன்று மிகவும் அழகாய் இருந்ததால் என்னவோ, அந்த நூலகத்தில் உள்ள சில வாலிப நெஞ்சங்களை கொள்ளை கொண்டாள் , இதை , ஜனா கவனிக்காமல் இல்லை.சிறிதாக பொறாமை எட்டி பார்த்தது அவனுள். தன் வேலையை முடித்த யாழினி, ஜனாவை அழைத்தாள் .ஜனாவோ, செவி மடுக்கவில்லை . ஏதோ ஒரு புத்தகத்தை மெய் மறந்து வாசித்தான் . அருகில் சென்று பார்வையிட்ட யாழினி, அன்று தான் ஜனாவின் விருப்பத்தை அறிந்தாள் . From the Ground Up by Sandy Macdonald என்னும் ஏவியேஷன் , வானூர்தி சம்பந்தப்பட்ட நூல்களை படித்து கொண்டிருந்தான். அவனை சுற்றியும் அது சம்பந்தமான நூல்களே இருந்தது. அவன் படித்து முடிக்கும் வரை காத்து கொண்டிருந்தாள் யாழ்., அங்கே அவனை ரசிக்கவும் அவள் மறக்கவில்லை, ஏனேனில், ஆணின் அழகு அவன் பண்பிலும், அறிவில் ,அவன் தன்னை உயர்த்துவதுமே என்பது அவளின் எண்ணம்..

ஜனா, எனக்கு பசிக்கிறது, உணவு அருந்த செல்லலாம் என்றாள் யாழ்.அருகிலிருந்த உணவகத்திற்கு சென்றனர்.

இருவரும், உணவு அருந்திக்கொண்டே, அவர்களின் கனவுகளை பரிமாறிக்கொண்டனர். ஜனா தன் வானூர்தி பணியின் ஆசையை வெளிப்படுத்தினான். தன் குடும்பத்தாரும் அறியாத சதிஷ் மட்டுமே அறிந்த தன் ஆசையை யாழினியிடம் கூறியதன் மூலம், அவளை மிகவும் நெருக்கமானவளாய் அவன் கண்டறிந்ததை, அவனுக்கே ஒரு நிமிடம் வினோதமாக தான் இருந்தது.


நடுவில், யாழினியின் அலைபேசி ஒலித்தது . ஜனாவிடமிந்து சற்றுத் தள்ளிச் சென்று பேசினாள் யாழ். அவள் குரல்களின் தடுமாற்றமும், முகத்தின் பதட்டமும் ஜனா கவனித்து தான் கொண்டிருந்தான். அவள் பேசி முடித்ததும், எதாவது முக்கியமா ?? என்றான் ஜனா.. இல்லை இல்லை, என் தோழி தான், ஒன்றும் முக்கியமில்லை என்று முடித்தாள்.

சரி, நம் வழக்கமான ஐஸ்கிரீம் சாப்பிட போகலாமா என்று ஜனா கேட்டான், யாழினியோ, பதட்டம் சிறிதும் குறையாமல், முடியாது, எனக்கு முக்கியமான வேலை ஒன்று இன்று மாலை உள்ளது என்றாள்.

இருவரும் "பை பை ", பார்ப்போம் என்று சொல்லி, அவரவர் வீடு திரும்பினர்.

அன்று மாலை, வீடு திரும்பிய ஜனாவின் தாய், தந்தை இன்று அலுவலகத்தில் இருந்து தாமதமாய் வருவார் என்பதால், சில பொருட்களை, எப்பொழுதும் வாங்கும் அண்ணாச்சியின் பெரிய மளிகை கடையில் வாங்கி வரச் சொன்னாள் .

கடைக்குச் சென்றுத் திரும்பிய ஜனா, ஒரு நொடி திடுக்கிட்டான். ஓர் அதிர்ச்சி காத்திருந்தது . ஆறு மணி இருக்கும் அப்போழுது. ஆம்,அது கண்களின் காட்சிப் பிழையோ என்று எண்ணினான்... அங்கே, இவன் நின்ற சாலையின் எதிர் சாலையில் இருந்தது சதீஷின் கருப்பு நிற போலோ- அதன் பேனெட்டில் இருவர் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், ஜனாவின் உயிர் தோழன் சதிஷ், மறுபுறம் நின்றவர் யார் எனத் துல்லியமாக தெரியாத போதும்,பெண் என்பது உறுதி. சல்வார் அணிந்திருந்தார்..... இருவரும் வாக்குவாதத்தில் இருந்தவாறு தெரிந்தது ஜனாவிற்கு.அது யாழ் என்றால், அவள் என்னிடம் சொல்லி இருப்பாள் என்று யோசித்தான்.

அவன் அருகே சென்று பார்க்க முயற்சித்தப்போது தான், கிடுகிடுவென்று, அங்கே இருவர் அல்ல மூவர் காரினில் ஏறுவதை கண்டான், இப்போது அவன் தெளிவாக பார்த்தது யாழினியை,இருப்பினும் அந்த மூன்றாவது நபரை , அவன் சரிவர பார்க்கும் முன், மகிழுந்து சர்ர்ர்ர்ர்ர்ர் எனப் பறந்தது.

வீடு திரும்பிய ஜனா, அவன் கண்ட அந்த காட்சியை மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தான். தெளிவு கிடைக்கவில்லை. எனவே ஒன்று அவனுக்கு, தெளிவாகியது, யாழினியிடம் இருந்து சிறிது நாட்கள், அவன் காதலை தள்ளி வைப்பதாக எண்ணினான். சதிஷின் இந்த மர்மமும், அவனை சிந்தையில் ஆழ்த்தியது.

சதிஷ் தன்னை எவ்வளவு முக்கியமென கருதுகிறான் என்று எண்ணினான், யாழினியும் அவனும் நண்பர்கள் என்பதை உரைப்பதற்கே அரையாண்டு காலம் ஆனது,

"இல்லை இல்லை, அது யாழ் சதீஷை தடுத்ததால் , "என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

சரி, சதீஷின் தாயை பற்றி, "அது நான் கேட்கவில்லை". இவ்வாறு எல்லாம் தன்னை சமாதான படுத்தினான்.

அவனிடமே நாளை கேட்போமா, அவன் சொல்வதற்கு சங்கடப்பட்டால் .... ஒரு வேலை அவனுக்கு நம் உதவி தேவையோ ..

.யாழ் சொன்ன ரகசியம் இதுவாக இருக்குமோ...

இருப்பினும் முக்கியமானது என்றால், அவனே சொல்லி இருப்பான்., சரி, அவனை சங்கட படுத்த வேண்டாம், அவனாய் பகிரும் போது அறிந்து கொள்ளலாம் என்று... கடல் அலை என கரை வந்து திருப்பிய , பதில் இல்லா கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ஜனா....

மறுநாள், கல்லூரியில் மூவரும் சந்தித்தனர். ஒரு சாதாரண நாளாகவே .கழிந்தது . ஒருவரும் எதையும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை

கல்லூரி நாட்கள் நகர, நகர , மூவரும் - ஜனா, யாழினி மற்றும் சதிஷ் நெருங்கிய நண்பர்கள் என ஆனார்கள்...இது கல்லூரி முழுவதும் பரவலானது. யாழ் அவ்வப்போது தனக்கு சில நண்பர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஏவியேஷன் படிப்பதனால், ஜனாவுக்கு அவன் கனவை கைப்பிடிக்க தேவையான துணுக்குகளை சேகரித்து ஜனாவிடம் பகிர்ந்தாள் . ஜனாவின் கனவென்னும் வித்துக்கு யாழ் நீரூற்றினாள்.

கேன்டீன் அரட்டைகள், லேப் சிக்கல்கள், பர்த்டே சர்ப்ரைஸ்கள் , பிடித்த விரிவாளரின் வகுப்புகள் , அவர்களின் கண்டிப்புகள் , அவ்வப்போது திரை அரங்குகள் என சுவாரஸ்யமாக கல்லூரி காலம் நகர்ந்தாலும் ,நம் கதாநாயகனின் தேடல் மற்றும் ஓயவில்லை.

ஆம். அந்த பெண் யார் என்ற கேள்வியும், எப்போது தன் நண்பன் மனம் திறப்பான் என்றும், யாழினி அவன் பார்வையில் வெறும் தோழியா ? என்ற கேள்விகள் மட்டும், ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்வண்டியைப்போல் தண்டவாளத்தில் தடம் புரண்டே ஓடின...

இருந்தும், இதை மிஞ்சவே, தன் தேடலின் வீரியத்தை வெகுப் படுத்தினான், ஆம், தன் ஏவியேஷன் கனவின் தேடலை தொடங்கினான் ஜனா......


திருமதி. என்.எஸ்.பி. அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து எழுத்தாளர் திருமதி. ஷர்மிளா ஆனந்த் அவர்களின் பாகம் - 7 தொடரும் !



ree

2 Comments


Nila
Jul 12, 2020

Moving towards the dreams or love or friendship ?

Like

kani mozhi
kani mozhi
Jul 11, 2020

starting asusal but poga poga interesting..👏👏 pavam Jana.. Evalo confusions athum Best friends kita.. Next writer intha confusion ku pathil soluvara.. Waiting eagerly 😊

Like

Subscribe Form

©2020 by Sri Bala - Founder of ChellaTamil - 3K - Tamizh - Kadhai Kavithai Katturai!

bottom of page